Friday, May 15, 2020

அணங்கை மங்கையர் தினம் 2


அன்னையின் உருவிலே

அரும்கருக் காத்துயிர் தந்த

அக்கை தங்கை வடிவிலே

அரும் பாசம் தந்து நின்ற

 

அருமை மனைவி வடிவில்

ஆருயிரில் கலந்து நின்ற

அணங்கு மகள் வடிவில்

ஆருயிராய் கொஞ்சி நின்ற

 

அவனியில் தோழி வடிவில்

அன்பு நேசமுடன் பழகும்

அன்னை அம்பிகை வடிவில்

அவனியை காத்து நிற்கும்

 

அனைத்து ரூபம் தனிலும்

அரு உறு துணையாய் நிற்கும்

அழகு மங்கையர் தினத்தில்

அவர் தம் பெண்மை போற்றுவோம்

 

அச்சிட்டு மடல் வடிவில்

அடியன் சிவ ராம தாஸன்

அன்புடன் புனைந்து நின்றேன்

அழகாய் பகிர்ந்து கொள்வாய் !


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம  தாஸன்






No comments: