Friday, May 15, 2020

முடியும் முடியாது


மனம் முடியும் என

நினைந்தால் முடியும்

மனம் முடியாது என

நினைந்தால் முடியாது

முடியும் என்றால் பாறாங்

கல்லும் சிறு துகளே

முடியாது என்றால் சிறு

துகளும் பாறாங்கல்லே

முடியும் என்றால் வானம்

கை தொடும் தூரமே

முடியாது என்றால் தொடும்

தரையும் தொடா உயரமே

முடியும் என்றால் கடலும்

கை கொள்ளும் அளவே

முடியாது என்றால் கரை  

தொடும் அலையும் ஆழமே


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம  தாஸன்



No comments: