Friday, May 15, 2020

மூன்றாம் பிறை



மூன்றாம் பிறையே

மூன்றாம் பிறையே


முழு நிறை மதியாய்

வண்ணமுடன் இருந்தாய்.

என் செய் வினையோ

தேய்ந்து மறைந்தாய்.

 

நல் வினைப் பயனோ

மெல்லென வளர்ந்தாய்.

மூன்றாம் பிறை என

பேரும் பெற்றாய்.

 

கண்ணுக்கு அழகாய்

விருந்து தந்தாய்.

கற்பனைத் திறனை

அள்ளித் தந்தாய்.

 

முழுவதும் அழகு

முக்காலும் அழகு

இக் காலும் அழகு

எக் காலும் அழகு

 

இயற்றாதப் பாடல் இல்லை.

போற்றாதக் கவி இல்லை.

வரையாத ஓவியம் இல்லை.

காணாத மாந்தர் இல்லை.

 

புவி தனில் அழைத்தனர் சிலர்.

வான் ஏறி தொட்டனர் சிலர்.

விண்கலம் அனுப்பினர் சிலர்.

நிலாச் சோறு தந்தனர் சிலர்.

 

புண்ணியம் என் செய்தாய்

இறை உனை சூடினான்.

இளம் பிறை நாதன் என

பேர் பெற்றனன்.

 

வாழிய வாழிய !


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம  தாஸன்


No comments: