Saturday, May 16, 2020

சேட்டை



துள்ளலும் துடுக்குத்தனமும்

கலந்த கலவையிது

உரிமையால் செய்யத்

தூண்டும் செயலிது

 

செய்கையின் விளைவை

அறியாப் பருவமிது

செய்த பின் வருத்தம்

காட்டும் பருவமிது

 

விளையாட்டால் செய்யும்

கபடமிலா செயலிது

துயரிடரும் துன்பமும்

இலாத செயலிது

 

முகத்தில் புன்னகை

வர வழைக்கும் செயலிது

முகத்தில் கலவரமும்

வர வைத்திடும் செயலிது


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


 


No comments: