Friday, May 15, 2020

ஆதவன்


அதிகாலையில் உதிப்பவனாம்

ஆயுள் ஆரோக்கியம் தருபவனாம்

இருள் தனை விலக்குபவனாம்

ஈரேழுலகு காத்தருள்பவனாம்


உயிர் வாழ அருளுபவனாம்

ஊழ்வினை அறுப்பவனாம்

எழில் வண்ணத்தில் இருப்பவனாம்

ஏழு புரவி தேரில் உலவுபவனாம்


ஐஸ்வர்யம் அட்சயம் தருபவனாம்

ஒளிக் கதிரை வீசுபவனாம்

ஓமிடியை நீக்கும் ஓகாரவுருவாம்

ஔவியம் நீக்கி அருள்பவனாம்


ஆதவனை தினம் தொழுதிடுவோம்

அவன் அருளைப் பெற்றிடுவோம்.


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


 


No comments: