ஆசிரியர் என்பவர் யாரோ
அவர் நம் வாழ்வில்
கிடைத்திட்ட வரமோ (ஆ)
அம்மையப்பனுக்குப்
பின்னே வந்திடுவார்
ஆண்டவனுக்கு
முன்னே நின்றிடுவார்
அவனியில் நமக்கு
கல்வி தந்திடுவார்
ஆசிரியர் எனும்
பெயர் கொண்டிடுவார் (ஆ)
நம் அறிவுக்கு வித்திட்ட
ஆசான் அவர்
நம் வாழ்வை உயர்த்திடும்
வழி காட்டி அவர்
நாம் வாழும் வித்தையை
கற்று தருபவரவர்
நம் திறமையை மேம்
படுத்திக் கொணர்பவர் (ஆ)
தன்னலம் காணாது
உழைப்பவர் அவர்
தன்னினும் மேலாய்
உயரச் செய்பவரவர்
நம் உயர்நிலை கண்டு
மகிழ்பவரவர்
நம்மை திருத்தி நல்
வழிக் காட்டுபவரவர் (ஆ)
மாணவ விழுதுகளை
வேரூன்றி வளரத்திடுவார்
நல் சுவை தரும் கனி
மரமாய் மாற்றுபவரவர்
நல்லாசிரியர் என்றும்
போற்றுதலுக்குரியவர்
நம் வாழ்வில் கிடைத்திட்ட
பெரும் வரம் அவர் (ஆ)
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments:
Post a Comment