Friday, May 15, 2020

அம்மா என்பது மூன்றெழுத்து


அம்மா என்பது

    மூன்றெழுத்து

அவனியில் தந்த

    பிறவி மூன்றெழுத்து


அவள் தந்த உயிரும்    

            மூன்றெழுத்து

தந்த உடலும்

    மூன்றெழுத்து


தந்த மூச்சும்

    மூன்றெழுத்து

தந்த பேச்சும்

    மூன்றெழுத்து


காட்டும் பாசமும்

    மூன்றெழுத்து

பொழியும் அன்பும்

    மூன்றெழுத்து


காட்டும் பரிவும்

    மூன்றெழுத்து

பொழியும் கருணையும்

    மூன்றெழுத்து


காட்டி நின்ற அப்பா

    மூன்றெழுத்து

கற்று தந்த பண்பு

    மூன்றெழுத்து


சொல்லி தந்த கல்வி

    மூன்றெழுத்து

போதித்த வீரம்

    மூன்றெழுத்து


பேசிய தமிழ்

    மூன்றெழுத்து

துயில பாடிய பாடல்

    மூன்றெழுத்து


காட்டிய ஆசான்

    மூன்றெழுத்து

பிணைந்த உறவு

    மூன்றெழுத்து


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்



No comments: