தை மகள் தேவிக்கு
தைத்திங்கள் திரு நாளில்
பொங்கப் பானை வைத்து
பசும் பால் தனை ஊற்றி
வெல்லமும் கலந்திட்டு
மஞ்சள் கொத்து கட்டி வைத்து
செந்தூரப் பொட்டு இட்டு
வரவேற்போம் உன்னை
தை மகளே !
பொங்கப் பானை
ஏற்றி வைத்தோம்
தை மகளே வருக
தைத்திங்கள் திரு நாளில்
பொங்கும் மங்களம் தருக !
வண்ணக் கோலம்
போட்டு வைத்தோம்
கரும்பு தனை
சாற்றி வைத்தோம்
பொங்கலோ பொங்கியது
பொங்கியது தங்கட்டுமே !
மும் மாரி பொழிந்திட்டால்
விளை நிலம் மகிழ்ந்திடுமே
விளைச்சலை தந்திடுமே
உழவரும் வாழ்ந்திடுவர்
கண்ணெதிர் தெய்வமாம்
ஆதவனைப் போற்றிடுவோம்
நிலம் தனில் உழுதிடும்
மாடு தனைப் போற்றிடுவோம்
தமிழ் மறைத் தந்தவனாம்
வள்ளுவனைப் போற்றிடுவோம்
தமிழர்களின் புகழோங்க
தை மகளே உனைப் போற்றிடுவோம்
தை மகள் நீ வந்தாலே
நல் வழி தான் பிறந்திடுமே
செல்வமும் பெருகிடுமே
மங்களமும் கூடிடுமே
தை மகளே வருக
கருணை மழைப் பொழிக !
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments:
Post a Comment