Friday, May 15, 2020

ஒற்றை நீர் திவலை



ஒற்றை நீர் திவலை நான்

ஓன்று மொழிந்திட வந்தேனே

ஒரு திவலைத் துளியாய் எனைக்

காண தவம் நீ பல காணிடுவாய் (ஒ)

 

பத்தடி ஆழம் தோண்டி நிற்க

பாய்ந்து வந்த தண்ணீர் நான்

பல நூறடி ஆழம் கண்டாலும்

காணாது நான் மறைந்திருந்தேன்

 

காவிரி பொன்னி வைகையென

நதியாய் பாய்ந்து நின்றேன் நான்

கவலை இல்லாத வாழ்வினை

உனக்கு தந்து நின்றேன் நான்

 

மரம் செடி கொடி பலவென

அடியோடு நீ  அழித்து நின்றாய்

குளம் ஏரி குட்டை தனை

தரை மட்டம் ஆக்கி நின்றாய்

 

மரங்கள் யாவை பல வெட்டி

சாய்த்து நின்றாய் நீ

மனம் போன போக்கில்

வாழ்ந்து வந்தாய் நீ

 

 மழை வந்த போது

சேமிக்காது நின்றாய் நீ

மழை நீர் போகாது

வீடு பல கட்டி நின்றாய் நீ

 

ஆற்று மணல் கொள்ளையென

வெட்டி அள்ளி நீ சென்றாய்

ஆழ் துளைக் கிணறு மூலம்

தண்ணீரை நீ  உறிஞ்சு நின்றாய்

 

சீமை கரு வேலம் உறிஞ்சு

நின்றது பாதி நீரை

சீமை குளிர் பானம் உறிஞ்சு

தள்ளியது மீதி நீரை

 

மரங்கள் பல நாட்டு

நீ பயன் அடைவாய்

மழை நீர்.சேமித்து

நீ  பிழைத்து கொள்வாய்

 

கண்டதும் பாய்ந்து வந்த

என்னிலை மாறி

தோண்டியும் கிடைக்காத

கானல் நீராய் மாற்றாதே

 

நதிகள் அனைத்தையும்

இணைத்து நின்று

நீர் இல்லா அல்லற் தனை

போக்கிடுவாய்

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: