பாஞ்சாலி துகில் உரித்தகையிலே
பலமிருந்தும் மௌனம் காத்து
பார்வையாளனாய் நின்றான்
பலஹீன பீஷ்ம பிதாமகன் !
பதி விரதை சீதயைக் காக்க
பலமின்றி நின்ற போதும்
பத்து தலை இராவணனிடம்
பலவானாய் போரிட்டான் ஜடாயு !
வீரம் என்பது உடல் பலத்தில்
அல்ல மன பலத்தில் தானே !
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment