Sunday, May 31, 2020

புகையிலை எதிர்ப்பு தினம்

 


31 மே

பகை என தெரிந்தும்
    புகை எதற்கு நண்பா 
உடல் நலம் கெடுக்கும்
    நஞ்செனத் திகழும் (ப)

நுரை யீரல் நலிந்திடும்
    இதயத்தை இறுக்கிடும்
இரத்த அழுத்தம் மிகுந்திடும்
    உபாதைகள் தந்திடும் (ப)

புற்று நோய் தந்திடும் 
    காச நோய் தந்திடும்
ஆஸ்துமா தந்திடும்
    மாரடைப்பில் முடிந்திடும் (ப)

மூச்சு இரைப்பு மிகுந்திடும்
    மலட்டு தன்மை தந்திடும்
ஆரோக்கியம் கெடுத்திடும்
    ஆனந்தம் குலைத்திடும் (ப)

உன்னதமான அரியதொரு
    உயிரையே குலைத்திடும்
புகைப் பழக்கம் கை விடுவாய்
    புகையின்றி வாழ்ந்திடுவாய் (ப)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

Friday, May 29, 2020

வண்ணக் கோலம்



வண்ணக் கோலமிது
வண்ணக் கோலமிது
வளைக்கர எழில் வஞ்சி
வரைந்த கோலமிது (வ)

நெளிவும் சுளிவும் 
கொண்ட கோலமிது
நெஞ்சில் நிறைவு
தரும் கோலமிது

கண்ணை ஈர்க்கும்
வண்ணக் கோலமிது
மனதைக் கவரும்
வண்ணக் கோலமிது (வ)

வாழ்த்து மொழியும்
வண்ணக் கோலமிது
விழிக்கு விருந்து தரும்
வண்ணக் கோலமிது

அக்கையார் இலக்குமி
வரைந்த கோலமிது
அருமை அருமை
அற்புத கோலமிது (வ)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்


தம்பதியர் தினம் 29 05 2020




பதி யின் பொருள் 
பலவென அறிவோம்
கணவன் தலைவன்

அரசன் கடவுள்
வீடு கோவில் குரு 
பூமி உறைவிடம் என (ப)

கணவன் தலைவன்
அரசன் கடவுளென
மனைவி என்றும் 

ன் துணைவணை
தன் பதியாய் 
கொண்டு உவந்தாள் (ப)

வீடு கோவில் குரு 
பூமி உறைவிடமென
கணவன் என்றும்

தன் துணைவியை 
தன் பதியாய் 
கொண்டு உவந்தான் (ப)

மனைவி கணவனை
தன் பதியாய் கொண்டு
கணவன் மனைவியை
தன் பதியாய் கொண்டு

இருவரும் தம் துணையை
தம் பாதி தம் பதி 
என தம்மை பகிர்ந்து
தம்பதியாய் வாழ்வரே (ப)

அயன் சிரசைத் தந்தான்
அரி மார்பைத் தந்தான்
அரன் பாதியைத் தந்தான்
நாம் நம்மைத் தந்தோம்

ஆண்டு மாறலாம் அகவை
கூடலாம் அன்பு மாறுமோ 
தம்பதியர் தினத்தில்
வாழ்த்துக்கள் பரிமாறுவோம் (ப)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்


Thursday, May 28, 2020

வெட்டுக்கிளியின் வெறியாட்டம்




புலம் பெயரும்
பூச்சி இனம்
பாலைவனத்து
பூச்சி இனம் (பு)

கூட்டம் கூட்டமாய்
கூடி பறந்து
கோடி கோடியாய்
தாக்கி நின்று

ஏக்கர் ஏக்கராய்
பரவி நிற்கும்
விளையும் பயிரை 
வேட்டையாடும் (பு)

மழைக் காலத்தே
இனப் பெருக்கம்
கோடைக் காலத்தே
கொடூர தாக்கம்

மூன்று முதல் ஐந்து
திங்கள் வாழும்
மூன்று சுழற்சி கட்ட
வாழும் பூச்சியிது (பு)

நாள் ஒன்றுக்கு
மணிக்கு இருபதாய்
நூறு கிலோமீட்டர்
பறக்கும் திறனுடைய

பசி பட்டினியை
பஞ்சம் உருவாக்கும்
அசுர வேகத்தில்
அழிக்கும் பூச்சியிது (பு)

விளை நிலத்தில்
பயிர் இல்லையேல்
வீதியில் வீடுகளில்
உலா வரும் 

மரம் செடி கொடியினை
அரித்து உண்ணும்
வெறியாட்ட வெட்டுக்கிளி 
அபாயமிகு வெட்டுக்கிளி (பு)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்



Monday, May 25, 2020

வலைத்தளம் 2



வலைத்தளத்தில் வீழ்ந்து விட்டால்
விலகி வருவது மிக கடினமே
வளரும் வயதில் தவிர்க்கா விட்டால்
வாழ்வில் சீர் குலைந்திடுமே

சின் ஷான் சித்திரக் காட்சியால்
சிந்தனை யாவும் மழுங்குமே
செயலி விளையாட்டு மோகத்தால்
செயலில் வேகம் மட்டுமாகுமே

போக்கி மான் விளையாட்டினால்
போக்கே மாறி விடுமே
போக்கிரித் தனம் மிஞ்சி நின்று
போகும் பாதை விலகிடுமே

காணொளியே கதியென இருப்பின்
கண்ணொளி பார்வை மங்குமே
காணும் காட்சி காண படித்திட
கண்ணாடி போட வேண்டிடுமே

கணிணி மடியினி செயலிலி என
காலம் பாராது மூழ்கியிருந்தால்
கண் விழிப் புற்று நோயினால்
கடும் அவதி பட நேரிடுமே

எடுத்து சொன்னால் செவி மடுக்காது
எதிர்த்து நின்று பேசத் தோன்றும்
எதிரி போல கண்டு நின்று 
எடுத்தெறிந்து இகழத் தோன்றும்

விட்டுக் கொடுத்து போகும் எண்ணம்
விந்தையாய் உனக்கு தோணும்
வீண் பிடிவாதம் கொண்டு நின்று
விலகிப் போக எண்ணம் தோணும்

கற்பூரமாய் பற்றிக் கொண்டு நின்று
கல்வி வித்தை கற்று வந்தினும்
கற்பூர வாசனை தெரியாத ஒன்றின
கழுதையாய் தேயும் அபாயமடா

ஓரடி முன் எடுத்து வைத்தாலே 
ஈரடி பின் இழுக்கும் உலகினில்
ஈரடி பின் வேகம் வந்து நின்றால்
பாரினில் முந்துவது எங்ங னமோ


மாற்றம் தனை உன்னில் வந்தால்
ஏற்றம் உயர்வைக் காணலாம்
ஆற்றல் தனை வெள்ளிப் படுத்தி
போற்றும் வாகை சூடலாம்

மாறிடுவாய் இங்கணமே
போற்றிடுவாய் இறை புகழை
ஆற்றிடுவாய் செயல் திறனை
பெற்றிடுவாய் பேர் புகழினை !

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்






வலைத்தளம் 1





அலையாது அலவளாவிடும்
அலை பேசி தனில்
வலைத்தளம் நுழைந்து
உலா வலம் வந்தேன்

மலையென திரண்ட
தகவல்கள் கொண்டு
மலைக்க வைத்திடும்
சிலையாய் மாற்றிடும்

கலை பல யாவும் கற்றிட
கரம் நீட்டிடும் களமாய்
விலை பொருட்கள் வாங்க 
விற்க உதவும் தளமாய்

இலை மறை செய்திகளை
வெளிக் கொணர்ந்திடும்
நிலை குலை வைக்கும்
தகவல்களும் உலாவிடும்

ஓலைச் சுவடி தொகுப்பினை
ஒய்யாரமாய் தந்திடும்
காலை மாலை செய்தியினை
காலத்தே நல்கிடும்

மேலை நாட்டு வர்த்தக
வேலையும் காட்டிடும்
வலைப்பின்னல் கொண்ட
வலைத்தளம் இதுவே.

நன்மை பல நல்கிடும்
சமூக வலைதளமுண்டு
தீமைகளும் தந்திடும்
சமூக விரோதிகளுமுண்டு

கருத்துக்கள் பரிமாற்றம்
பொருளாதார வளர்ச்சி
குடும்ப பிணைப்பு
நட்பு வட்டாரப் பெருக்கம்

வணிக வர்த்தகத் தேடல்
கல்வி பொழுது போக்கு
புதிய கருத்து பதிவுகள்
நலம் பல நிலவிடும்

முக நூலில் மூழ்கி
முழு நேரம் கழிக்கும்
இரகசியம் களவாடி
வங்கி பணமிழக்கும்

குற்றங்கள் பெருகிடும்
வதந்திகள் பரவிடும்
ஆபாசம் நிலவிடும்
தீமைகள் நிலவிடும்

நேரம் கிடைக்கையில்
இணையம் தனில்
உலா வலம் வந்தின்
நன்றே ! இன்றி

இணையத்தில் மூழ்கி
நேரத்தைக் கடத்தினால்
கேடே கேடே கேடே
பெரும் தீதே தீதே தீதே  !

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

பேசும் மரம்

 

 














சிறு விதையென
தூர எறிந்திடினும்
புவியில் ஆழ ஆழ
புதைந்து போயிடினும்

விதையில் உதித்து
வேரூன்றி வளர்ந்து
செடியாகி கொடியாகி
நெடு மரமாகி நின்றேன்

பச்சை இலை துளிர்த்து
வெள்ளைப் பூ பூத்து
காயாகிக் கனிந்து நான் சுவைக் கனி தந்தேன்

அடர்ந்து மலர்ந்து நின்று
படர்ந்து விரிந்து நின்றேன்
கண்ணுக்கினிய விருந்து 
படைத்து குளுமை தந்தேன்

சுடரொளி கதிர் வீசும்
ஞாயிறு கதிர் தடுத்து
வெம்மை தணித்து நின்று
குளுமை நிழல் தந்தேன்

தென்றல் வீசும் பொழுதே
மெல்ல ஆடி நின்றேன்
மழைச் சாரல் பொழியவே
ஒதுங்க இடம் தந்தேன்

விதை வீழ்ந்து போயிடினும்
விருட்சமாய் வளர்ந்த நான்
விஸ்வரூபமாய் ஓங்கி நான்
வேண்டும் நிழல் தந்தேன்

மடிந்த பின் எந்தன் உடல் 
யாவும் உந்தன் அடுப்பங் கரையில் நெருப்பு தார 
வந்து உதவுவேன் கண்ணா

இன்னா செய்தாரை ஒருத்தல் 
எனும் குறள் மொழிக்கேற்ப
இனியன யாவும் தந்தேன் மரம் 
எனும் நாமம் கொண்டேன்.


சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

தண்ணீர் தினம்





22.03.2019 

நீரின்றி  
   உலகில்லை
பாரில் இன்று 
   நீரில்லை

வேரின்றி 
   மரமில்லை
மரமின்றி 
   மாரி இல்லை (நீ)

மாரி காலத்தே  
   பொழிவதில்லை
ஏரி குளம் ஆறு  
   நிரம்புவதில்லை

கார் மேக மழை 
   பொழியவே
மரம் பல 
   வளர்த்திடுவோம்

தூர் வாரி 
    ஏரி  குளம்
சுத்தம் 
    காத்திடுவோம்

விரயம்  
   தவிர்த்திடுவோம்
சிக்கனமாய் 
   செலவிடுவோம்

சேமிப்பு 
   செய்திடுவோம்
நெகிழி 
   துறந்திடுவோம்

போர்க் கால 
   நடவடிக்கையாய்
துரிதமாய் 
   செயல்படுவோம்

ஊரே ஒன்று 
   திறண்டு
கடமையை 
   ஆற்றிடுவோம்

கருவேலம் 
   இழுத்ததுவே
குளிர்பானமும்
   எடுத்ததுவே

மணல் கொள்ளையில் 
   தொலைந்ததுவே
சுத்தகரிப்பில் 
   இழந்ததுவே

புவி சூடாக்கல் 
   தடுத்திடுவோம்
கரி எரியாக்கல் 
   குறைத்திடுவோம்

வருங்காலம் 
   செழித்திடவே
நீர் வளம் 
   காத்திடுவோம்

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

Sunday, May 24, 2020

சகோதரர் தினம்















உதரத்தில் ஒன்று
இணைந்தோம்
உதிரத்தில் ஒன்று
இணைந்தோம்

உறவென பிணைந்து
நின்றோம்
உதறாது இணைந்து
நின்றோம்

உணவினைப் பகிர்ந்து
உண்டோம்
உரிமையாய் பழகி
நின்றோம்

பாலும் சோறும்
பகிர்ந்து நின்றோம்
பாசமும் அன்பும்
பகிர்ந்து நின்றோம்

குரல் கொடுத்தோம்
தோள் கொடுத்தோம்
துணை நின்றோம்
துயர் துடைத்தோம்

தாய் தந்தை
ஒன்று கொண்டோம்
தரணியில் 
இணைந்து நின்றோம்

சகா வாய் குழாமிட
சகோதரன் என ஆனோம்
சக உதரம் பகிர்ந்திட
சகோதரன் என ஆனோம்

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

Friday, May 22, 2020

நிழலில்லா நாள் (24.09.2019)



நிழலில்லா நாள்
காண வாரீர் நண்பா நீ (நி)

ஈரிரு ஆங்கிலத் திங்கள்
இருபத்தி நான்காம் நாளாம்
நற்பகல் மதிய வேளை தனிலே
நானிலம் கண்டு களிக்க (நி)

கடக ரேகைக்கும்
மகர ரேகைக்கும் இடையே
பகலவன் கடக்கும் பொழுதினில்
காண இயலாத ஒரு (நி)

செங்குத்தாய் சூரியன் 
தலை உச்சி நேர் மேலே 
நம் பாதம் தனில் வீழும்
நிழல் தனை காண இயலா (நி)

வருடம் இரு முறை தோன்றும்
நிழல் பூஜ்ஜிய நிகழ்வினை
கவி சிவ ராம தாசனும்
காண விழையும் எழில் (நி)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

உலக குரல் தினம் 16.04.2019



குரலுக்கு வந்தனம்
   செய்வோம்
தாய் மொழி பேசும் 
    இனியதொரு (கு)

ஈரிரு ஆங்கில   
    மாதமதில்
ஈரெட்டு தினம் 
    தனிலே
உலக குரல் 
    தினமாய்
கொண்டாடும் 
    வேளையில் (கு)

பச்சிளம் 
    எழிலொரு
யாழினும் 
    இனியதொரு
அமுதினும் 
    இனியதொரு 
தேன் சுவை 
    மழலை (கு)

குயிலினும் 
    மிக்கதொரு
இன்னிசை 
    கலந்ததொரு
கானத்தை 
    தந்ததொரு
தெய்வீகக் 
    கானக்குயில் (கு)

சிவ ராம 
    தாஸன் 
சிந்தையை 
    மகிழ்விக்கும்
பாடும் பூரண 
    நிலவாய்
பரவசம் 
    தந்திடும் (கு)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

Thursday, May 21, 2020

ஆடித் தபசு


சைவம் வளர்த்திட 
சிவ சங்கரனாய்
வைணவம் தழைத்திட 
அரி நாரணனாய்
பக்தி மார்க்கம் 
தழைத்து ஓங்கிட
பக்தர்க்கு அருள் 
புரிந்து நின்றனரே

அரியும் அரனும் 
ஒன்றென நாம்
அறியும் வகையில் 
இனிது நன்றே
அன்னை உமையவள் தவமிருந்தாள்
ஆடித் திங்களில் 
அருளித் தந்தாள்

சங்கன் பதுமன் 
ஐயம் தீர்த்திடவே
சங்கரனை வேண்டி 
காட்சித் தந்திடவே
சங்கரி தேவி ஊசி
முனை தவமிருந்தாள்
சங்கர நாராயணனை 
அருளித் தந்தனரே

கலியில் கிடைத்த 
நல்ல வரமென்பர்
காணக் கண்கோடி 
வேண்டும் என்பர்
கோமதி அம்பாள் 
அருளித் தந்து நின்ற
கோலமிகு சங்கர 
நாராயணன் தோற்றமே.

நெல்லலை தலத்தில் 
அருளிய கோலமே
எல்லை இல்லா 
பேரானந்தம் தந்திடுமே
இல்லை எனாது அருள் பொழிந்திடுமே
அல்லற் பிறவியும் 
அறுத்து அருளிடுமே !

பாழும் வினைத் 
தீர்த்து கரையேறிடவே
மாலும் அரனும் 
இணைந்த கோலத்தினை
நாளும் பொழுதும் 
சிந்தையில் நினைந்து
தாளைப் பற்றி பணிந்து போற்றுவோமே

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

விழியின் மொழி



விழியின் மொழிக்கு
ஈடு உண்டோ பேசும்
விழியின் பொருளுக்கு
நிகர் உண்டோ கண்ணே (வி)

கரத்தின் தொடுதலால்
காட்டும் அக்கறை
மொழிந்திடும் சொல்லினும்
பெரிது அன்றோ ஆயினும்

இனிய சொல்லினால்
இதயத்தை தொட்டு நின்று
நயனத்தில் ஈரம் தருமோயின்
சாலச் சிறந்தது அதுவன்றோ 

விழியால் பேசியும் கரத்தால் 
அக்கறையும் இனிய சொல்லில் 
அன்பினால் இதயம் தொட்டு விடு
விழியில் ஈரம் காண்பாயே

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

கோடை மழை







கோடை மழை 
   வாராயோ
கொடையெனப் 
   பொழியாயோ (கோ)

கோடி பரிசு பண
   மழை விழுமின்
கோடியில் ஒருவர்க்கே
   உவகை தரும் !
கோடையில் வான்
   மழை பெய்யுமின்
கோடானு கோடிக்கு
   உவகை தருமே (கோ)

கத்திரி வெயில்
   தனை கத்தரிக்க 
 சுட்டெரிக்கும் வெயில்
   சூடினை தணிக்க
ஆலங் கட்டி  மழை 
   என வருவாயே
ஆ நிறை மாந்தர் ஆட
   மகிழ்வு தருவாயே (கோ)

மேகத்தை   
   கருக்க வா
தாகத்தை 
   தணிக்க வா
சோகத்தை   
   தீர்க்க வா
போகத்தை  
   அள்ளித் தா 

சிலு சிலு   
   காற்றுடன் வா
சல சலவென 
   பொழிந்து போ
கல கலவென 
   மகிழ வா
வண்ண வான   
   வில்லொடு வா வா (கோ)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

இராமனுஜ ஜெயந்தி மாலா



எதி ராஜ ராஜ ராஜ 
      ஸ்ரீ இராமாநுஜா 
எம்மான் ஸ்வாமி ஸ்ரீ
    இராமாநுஜா (எ)

வைணவம் தழைக்க
    வந்த வேதாந்தியே
வையகம் உய்க்க வந்த
    வைஷ்ணவ குருவே 

விசிஷ்டா த்வைத 
    தத்துவம் தந்தவனே
விஷ்ணு புராணம் 
    உலகறியச் செய்தவனே

வேதாந்த சங்கிரகம்
    வேதாந்த சாரம்
வேதாந்த தீபம் தந்த
    வரதப் பிரியரே (எ)

ஸ்ரீ கீதா பாஷ்யம்
    ஸ்ரீ ரங்க காத்யம்
ஸ்ரீ பாஷ்யம் தந்த
    ஸ்ரீ ஸ்ரீ இராமாநுஜா

ஆலய வழிபாடு
    ஆன்மீக நெறிமுறை
அருளிச் செய்ததொரு
    ஆதிசேடன் அவதாரமே

ஆதிரையில் தோன்றிய
    ஆண்டாளின் அண்ணனே
ஆளவந்தாரின் சீடரே
    ஆச்சார்யார் பெருமானே (எ)

திருவேங்கடவன்   திருக்கரத்தில்
    திருவாழி சங்கம் ஏந்தச் செய்தவரே
    திருக்கோஷ்டியூர் தலத்திலே
திருமந்திரம் மொழிந்தருளியவனே

தமிழ் வேத மறையாய்
   திவ்ய பிரபந்தம் தனை
திருக் கோவில் தனிலே
    தினமும் ஓத செய்த

சதுர் மறை போற்றும்
    சிவராம தாஸன் பணியும்
சஹஸ்ர சிர ஸர்ப்பாவதார
    ஸ்ரீ இராமானுஜர்    
    தாள் சரணம். (எ)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

Wednesday, May 20, 2020

ஆடித் திங்கள்


ஆடி மாதம் 
தமிழ் திங்கள்
அழகிய ஒரு 
தமிழ் மாதமே
அற்புதங்கள் 
நிறைந்ததொரு
ஆன்மீகத்துகந்த 
தமிழ் மாதமே !

வடக்கில் இருந்து 
தென்திசை நோக்கி
ஆதவன் அடி 
வைப்பது இம்மாதமே
ஆதிமூலமே என 
கூவிய ஆனைக்கு
கஜேந்திர மோட்சம் 
அருளிய மாதமே.

ஆடிப் பூரத்தில் 
அவனியில் தோன்றி
தீந்தமிழ் மொழியில் 
திருப்பாவை தந்து
மாந்தர் நம்மை 
உய்க்க வந்த 
பாவை ஆண்டாள் 
அவதரித்தது இம்மாதமே!

ஊசி முனையில் 
ஈசனை நினைந்து 
உமையவள் வேண்டி 
தவம் புரிந்திட
சங்கர நாராயணனாய் 
தோன்றி அருளிய 
ஆடித்தபசு நிகழ்வு 
இத்தமிழ் மாதமே

பௌர்ணமி திதியில் 
தோன்றி நின்று
பூரண கல்வி ஞானம் 
தந்தருளும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் அவதரித்த
அழகிய மாதம் 
இத்தமிழ் மாதமே !

வாழ்க வளமுடன் 
மாந்தர் புவியிலே
வையம் தனிலே 
அவதரித்து நின்று
வேதத்தை நான்காய் பிரித்தருளிய வேத 
வியாசர் தோன்றிய 
திவ்ய மிகு மாதமே.

பதினெட்டாம் 
நாளாம் திரு நாளில்
பஞ்சம் தீர்த்திட 
புண்ணியம் தந்திட
பொதிகை காவிரி 
பெருக்கி ஓடிடும்
பதினெட்டாம் 
பெருக்கு இம்மாதமே !

வேத ஸ்வரூபமாய் 
திகழ்ந்து நிற்கும்
விஷ்ணு வாகனனாய் 
பறந்து நிற்கும்
பெரிய திருவடி 
சுவாதியில் தோன்றிய
கருட பஞ்சமி 
இத்தமிழ் மாதத்திலே !

நீத்தார் கடன் யாவும் 
தீர்த்து நின்றிட
முன்னோர் பூரண 
அருள் பெற்றிட
தீர்த்த புண்ணிய 
நதியில் முழுங்கிட
ஆடி அமாவாசை 
புண்ணிய திதியே !

போற்றட்டும் இறைநாமம் பாடட்டும் அவன் புகழ்
பரவட்டும் பக்தி மயம் பொழியட்டும் திருவருள்
பொங்கட்டும் மங்களம் பெருகட்டும் செல்வம்
பைந்தமிழ் மாதம் ஆடித் திங்களிலே !

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

தேர் வடம் இழுக்க



தேர் வடம் இழுத்திட
    வாரும் பிள்ளாய்
நடமாடும் கோவிலாய்
     பவனி வரும் (தே)

பூர்வ ஜன்ம புண்ணியப்
     பலனா....ய் கிட்டும்....
புவி மாந்தர் யாவர்க்கும்
     பேரருள் பொழியும் (தே)

கர்ம வினைகள் யாவும்
     ஆய களையும்
நோய் நொடி யாவும்
     நொடியில் விலகும்

வழக்குகள் நிறைந்த
     பிரச்சனை அகலும்
மனக் குழப்பங்கள் விலகி
     நிம்மதி நல்கும் (தே)

வெற்றி பல பல நம்
     வாழ்வில் குவியும்
சகல சௌபாக்கியங்கள்
     நாடி வந்து சேரும்

சிவ ராம தாஸன் 
     பணிந்து போற்றிடும்
காஞ்சி மஹான் மொழிந்த
     தெய்வ வாக்கின் படியே (தே)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

சிவ சக்தி அர்த்தனாரி



சிவனில் பாதி
    சக்தி என்பர்
சக்தியில் பாதி
    சிவம் என்பர் (சி)

சிவனுடன் சக்தியும்
    சக்தியுடன் சிவமும்
இணையும் கோலமே
    அர்த்தனாரி ரூபமே 

சிவ சக்தி ரூபமே
    திவ்ய ரூபமே
சிவ ராம தாஸன்
    பணியும் நாதனே (சி)

அம்மை கருணை பொழிய
    அப்பனவன் காத்து அருள
அம்மையப்பனாய் காக்கும்
    அர்த்த நாரீயே சரணம்

ஆனை முகன் ஒரு புறமும்
    ஆறு முகன் மறு புறமும்
அந்தணர் ஓதி நிற்கும்
    அரு மறை போற்றிடும் (சி)

புலித்தோல் சாற்றிய
    இடை ஒரு புறம்
ஒட்டியானம் அணிந்த
    இடை மறு புறம்

பிறை நுதற் தனிலே
    திரு நீறு ஒரு புறம்
விற்புருவ நெற்றியில்
    குங்குமம் மறு புறம்

கங்கை திங்கள் தாங்கிய
    செஞ்சடை ஒரு புறம்
சுட்டி பதக்கம் சூடிய
    கருங்குழல் ஒரு புறம்

முப்புரி நூல் நாக மணி
    விரி மார்பு ஒரு புறம்
முத்தங்கி மாலை அணிந்த
    மாதர் மார்பு மறு புறம்

வலிமை மிகு தடந்
    தோள் ஒரு புறம்
மென்மை பூத்த கமல
    மேனி மறு புறம்

மஞ்சள் வண்ண பட்டு
    பீதாம்பரம் ஒரு புறம்
பச்சை வண்ண பட்டு
    புடவை மறு புறம்

பாசுபதம் தாங்கும்
     திருக்கரம் ஒரு புறம்
பங்கயம் தாங்கும்
     மலர்கரம் ஒரு புறம்

குண்டலம் ஒரு புறம்
    தாடங்கம் மறு புறம்
கருணை  பொழியும் 
    விழி இரு புறம் (சி)

சிவ ராம தாஸன்
    பணிந்து போற்றும்
சிலம்பு அணிந்த பொற் 
    பாதம் ஒரு புறம்

சலங்கை அணிந்த திரு
    பாதம் மறு புறம்
வீடு பேறு முத்தி தரும்
    பாதம் திரு பாதம் (சி)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

வெயில்



சுடரொளி வீசி சுற்றி 
   சுழலும்  சூரியனே
சுட்டெரிக்கும் வெயில்
   ஏனோ ஏனோ

கடும் சினம்  
   கொண்டது போல நீ
கடும் கனல் வெயில்
   தந்தது ஏனோ

தகிக்கும் தழல் தந்து
   தாண்டவமாடி நின்று
தாங்காத தாகத்தினை
   தயங்காது தந்தாயே

வற்றாத ஜீவ நதியும்
   வற்றி தான் போனதே
வற்றாத நதி இனி எம்
   விழி சிந்தும் நீர் தான்

நீர் நதி ஓடம் யாவும்
   பாலை வனம் ஆனதே
நில வளமும் குன்றி தான்
   விவசாயம் போனதே

நீர் இன்றி வாடிடும்
   வையத்து உயிரினத்தை
நீர் இன்று இன்னும்
   வாட்டுவது தகுமோ

நிழல் தந்திட மரம்
   நடாத எம் குற்றமோ
நிழல் புகா காடு தனை
   அழித்த குற்றமோ

சுற்றுப் புற சூழலை
   கெடுத்த குற்றமோ
சுகாதார  கேட்டினை
   விளைத்த குற்றமோ

எரி பொருள் எரித்து
   புவி வெப்ப மயமானதாலோ
பருவ நிலை மாறிட
   பக்க துணையாயிருந்ததாலோ

மிகுந்த கரிமில வாயு 
  வெளியேற்றத்தாலோ
வளி மண்டலம் தனிலே
   ஓட்டை விழுந்ததாலோ

ஆயினும் ஆதவனே
   பிழையாவும் பொறுப்பாய்
ஆதரவு கரம் தந்து
   ஆறுதலாய் இருப்பாய்

சிவ ராம தாஸன் சிரம் 
   பணிந்து விழைகிறேன்
சினம் தணிந்து சுடர்
   தணிந்து சுழல்வாயே 

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

ஆதி சங்கரர் ஜெயந்தி



காலடியில் உதித்தாரடி 
கண்ணே நம்
பாரதத்தில் உதித்தாரடி 
ஆதி சங்கரராய் (கா)

ஆல கால விடம் 
உண்ட நாத திரு 
நீல கண்ட 
அவதாரமாய் (கா)

நந்தன வருடமாம்
வைகாசி திங்களாம்
வளர் பிறை திதியாம்
பஞ்சமி திதியில் (கா)

காலம் கடந்து நின்ற
தேசம் கடந்து நின்ற
என்றும் நிலைத்து நின்ற
தத்துவம் தந்திட (கா)

அன்னை ஆர்யாம்பா
எந்தை சிவகுருவின்
தவத் திரு குழந்தையாய்
இந்து தர்மம் தழைத்திட (கா)

நானிலம் தனிலே
நல்லறம் தழைக்க
இல்லறம் துறந்து பால
துறவறம் பூண்டிட (கா)

குரு கோவிந்த பகவத்
பாதர் சீடராய்
அத்வைத தத்துவம்
அவனியில் தழைக்க (கா)

பற்பல ஸ்துதிகள்
பிரம்ம சூத்திரம்
பஜ கோவிந்தமருளி
பக்தி அறம் தழைக்க (கா)

பாத யாத்திரையில்
பாரதம் சுற்றியே
பீடங்கள் அமைத்த
பரம வேதாந்தராய் (கா)

எண்ணிரு பதினாறு
அகவை வரையில்
அவனியில் இருந்த
அவதார புருஷரடி (கா)

எட்டெட்டு பக்தி
படைப்புகள் தனையே
புனைந்து அருளிய
பகவத் பாதாள் (கா)

சிவ சங்கர ஸ்வரூப 
சங்கரர் பாதமதை
சிவ ராம தாஸன் போற்றி
சிரம் தாழ்ந்து வணங்கிட (கா)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

பானு ஸப்தமி


ஸூர்ய பகவான்
   ஸப்தமி திதியில்
உலவும் நாளே   பானு 
   ஸப்தமி நன்னாளே 
ஆயிரம் மடங்கு
   புண்ணியம் நல்கும்
ஆயிரம் சூர்ய கிரகணத்திற்கு
   ஒப்பாகும் நன்னாளே (ஸூ)

புண்ய நதி ஸ்னானம்
   பூஜா மந்திர தானம் 
காயத்ரி மந்த்ர ஜபம் 
   ஹோம யாகம் ஆதித்ய 
ஹ்ருதய பாராயணம்
   ஸூர்ய நமஸ்காரம்
ஆயிரம் மடங்கு புண்ய
   பலனை நல்கிடும் (ஸூ)

சனீஸ்வர பகவான்
   அன்னை சாயா 
துணை ஆதவனை 
   துதியும் நாளிதுவே
துரியன் துணையாள்
   பானுமதி தேவி
பாஸ்கரனை தொழுது
   அருள் பெற்ற நாளே (ஸூ)

பார்வை குறையைத்
   தீர்த்து அருளும்
தொழு நோயினை
   நீக்கி அருளும்
பித்ரு தோஷம் 
   ஆய களையும்
சிவ ராம தாஸன்
   நாளும் பணியும் (ஸூ)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

நம்மாழ்வார்


அவதரித்தாரே அவனியில்
   அவதரித்தாரே 
சடகோப  நம்மாழ்வார்
   அவதரித்தாரே 

வைகாசி திங்களில்
   விசாக நட்சத்திரத்தில்
வையகம் உய்த்திடவே
   வைணவம் தழைத்திடவே (அ)

திரு மகள் உறை மார்பன்
   திருச்செவி மடுத்திட
தீந்தமிழ் மொழி தனிலே
   திருவாய் மொழி தந்திட 

தாமிரபரணி நதிக்கரையில்
   ஆழ்வார் திரு நகரில்
திருக்குருகூர் தலம் தனில்
   கரி மாறனாய் அவர் (அ)

வேதம் தமிழ்   
   செய்த மாறனாய்
குழந்தை முனி 
   ஞானபிரானாய்

மெய் ஞானக்கவி  
   பராங்குசனாய்
பவ ரோக 
   பண்டிதனாய் (அ)

சாம வேத 
   சார சாகரமாய்
திராவிட தமிழ்   
   வேதமாய்

ஆயிரம் பாசுர 
   தேனமுதாய்
பிரபந்த திருவாய் 
   மொழி தந்திட (அ)

திருவந்தாதி 
   திருவாசிரியம்
திருவிருத்தம் 
   தந்தருளவே

குமரித் துறைவன்   
   பெரியனாய்
நாவீரர் வகுளா   
   பரணனாய் (அ)

காரியார் உடைய   
   நங்கை சுதனாய்
கம்ப சடகோப  
   அந்தாதி நாதனாய்

ஸ்ரீ மதுர கவி 
   ஆழ்வார் குருவாய்
கவி சிவ ராம 
   தாஸன் பணிந்திட (அ)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

ஓவியக் கலை தினம் 16 05 2020


ஓவியக் கலையைப்
   போற்றும் தினமிதுவே
ஓவியக் கலைஞரைப்
   போற்றும் தினமிதுவே (ஓ)

புள்ளியில் துவங்கி
   நெளிவு வளைவு 
சுழியுடனே மனங்கவர்
   கோலம் தந்திடும் (ஓ)

வண்ண வண்ண 
   நிறம் தனிலே
கை வண்ணத் 
   திறம் தனிலே

தூரிகை ஏந்தியே
   காவியம் படைத்து
பேருவகை தந்திடும்
   பேரெழில் வண்ண (ஓ)

எண்ணத்தில் மிளிரும்
   வண்ணத்தில் ஒளிரும்
செயற்கை பொருளாலே
   இயற்கை காட்டிடும்

பேசும் படம் போல
   பேசும் கண் போல
உயிரோவியம் தனையே
   சுவரொட்டியில் காட்டும் (ஓ)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

தஸரா



ஈரைந்து தீய குணம்
    அழித்து நிற்கும்
தினமே தஸரா என்னும்
    இனிய நன்னாளே (ஈ)

அகங்காரம் அறவே விடுத்து
    கொடூரம் தூர ஒதுக்கி
அநியாயம் புரியாதிருந்து
    காமத்தில் வீழாதிருந்து

கோபத்தை தணித்து வைத்து
    பேராசை இல்லாதிருந்து
மடமையை கொளுத்தி நின்று
    பொறாமை கொள்ளா திருந்து

மோகமதில் மூழ்காதிருந்து
    சுயநலம் ஒதுக்கி வைத்திட
சிவ ராம தாஸன் மொழிந்த
    பத்தினை அறவே ஒதுக்க

காணும் நாளெல்லாம் தசராவே 
    காண்பதெல்லாம் நலம் தானே 
கலியுகம் தனில் சுகம் தானே
    களிப்பது நம் உள்ளம் தானே (ஈ)



சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

அட்டமி சப்பரம்



வாரீர் வாரீர்
சப்பரம்  காண வாரீர்
அட்டமி சப்பரம் 
காண வாரீர் வாரீர் (வா)

உலகாளும் ஈசன்
உமையொரு பாகன்
உலகுக்கு படியளக்கும்
விழா காண (கா)

மார்கழி திங்கள் தேய் 
பிறை அட்டமி திதியில்
மதுரை மாசி வீதி
பிரதட்சண உலாவை (கா)

ரிஷப வாகன
சட்டத் தேர் விழா
வெளி வீதி உலா
காண வாரீர் (வா)

சிவ ராம தாஸன்
சிரம் பணிந்து போற்றிட
சிந்தை உவந்து சிவ சக்தி 
அருளும் உலாக் காண (வா)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

பிரதோஷம்


இந்நாள் நன்னாள்
    பொன்னாள்
இக பர சுகம் தரும்
    நன்னாள் (இ)

திங்களைச் சூடிய
    நாதன் இங்கே
திவ்யத்திரு நடனம் 
    ஆடிடும் நாள்

திவ்ய நந்தி மீது
    ஆடிடுவார்
திவ்ய தரிசனம்
    தந்திடுவார் (இ)

தைத் திங்கள் எனும்
    இம்மாதத்தில்
திருவாதிரை எனும்
    நட்சத்திரத்தில்

திங்கட் கிழமை
    திரயோதசி திதி
பிரதோஷ கால
    நடனமாடும் (இ)

முக்கண்ணார்க்கு உகந்த
    திதி கிழமை  நட்சத்திரம்
மூன்றும் சேர்ந்து நின்று
    முக்கூடலாய் கூடும்

முத்தான பிரதோஷ
    கால இந்நாளே
மகிமை நிறைந்த
    பொன்னாளே (இ)

அபூர்வ பிரதோஷ
    திரு நாளாம்
அனைத்து சகல
    சௌக்கியம் தந்திடும்

பிர தோஷ பூசையில்
    வழி படுவோம்
பிறை சூடிய நாதன்
    அருள் பெறுவோம் (இ)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

கார்த்திகை தீபவொளி வாழ்த்துக்கள்



கார்த்திகை தீப 
     ஒளி மிளிரட்டுமே
காரிருள் நீக்கி
     அருளட்டுமே
கருணை ஒளி
     பொழியட்டுமே
கனக மழை
     கொட்டட்டுமே (கா)

அடி முடி காணாது
     தேடி நின்று
அரியும் அயனும்
     காணாது நின்று
ஆதியும் அந்தமும்
     இல்லாது நின்று
அருட் பெருஞ்சோதியாய்
     அண்ணாமலையில் (கா)

பஞ்ச பூதத்தின்    
     நாதனவன் 
பஞ்சாட்சர மந்திர 
     நாதனவன்
பஞ்ச எழில் சிர 
     நாதனவன்
பஞ்ச கர நாத 
     எந்தையவன் 

இல்லத்தில் இன்பம் 
     பொங்கிடவே
அன்பெனும் ஊற்று 
     பெருகிடவே
சிவ ராம தாஸன் 
     வேண்டிடவே
சிவனவன் மலை 
     வடிவினிலே (கா)

எண்ணத்தில் நல்லன
     பெருகட்டுமே
அன்னமும் சொர்ணமும்
     சேரட்டுமே
அண்ணாமலை உறை
     அரனாலே
உண்ணாமலை நாதன்
     அருளாலே. (கா)

சந்தர் சோமயாஜிலு (@)
     சிவ ராம தாஸன்

விதியினை மதி வெல்லுமோ




விதியினை மதி
வெல்லுமோ வல்
விதியினை மதி
வெல்லுமோ (வி)

வாய் மொழியால்
செய் வினையாவும்
வாய் மொழியால்
பெற்று கழியுமே

செய் செயலால்
செய் வினையாவும்
செய் செயலாய் பின்
வந்து கழியுமே

மனதினால் தோன்றும்
செய் வினையாவும்
கனவினில் தோன்றி
பின் கழியுமே

நல் வல் வினை
இரண்டும் கழிந்த 
பின்னே முத்தி கிட்டிடும்
இறை அருளாலே (வி)

மத்தென கொண்டு
கடையும் தயிரிலே
மறைந்திடும் வெண்ணை
வருவது போலெ

மறைந்திடும் வலியது
விதி கரையும் பொழுதே
இறையவன் குரு 
வடிவாய் வந்தருளி

வாய்மொழி பார்வை
ஸ்பரிச முறையிலே
விதியினைக் கரைத்து
முத்தி தருவரே

அல்லற்தனை விடுத்து
நல்லறம் புரி மனமே
வல்லவன் இறையவன்
நல்லருள் புரிவரே (வி)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

கனா கண்டாள் ஆண்டாள்


கனா கண்டாள் காரிகை
கண்ணன் கரம் பற்ற.... (க)

பூ மகள் மடியிலுதித்த
பூங்குழலாள் பூவையே
பூ மாலை தனை தொடுத்து 
பூ சூடி நின்ற பாவையே (க)

பாவை அகவையோ ஒர் ஐந்து
பாவை தொடுத்ததோஆறைந்து
கோவை நினைந்து தொடுத்த
கோர்வை நிறைந்த பாமாலை (க)

நாரணன் புகழ் பாடி ஜகத்
காரணனை நினைந்துருகி
வாரணம் ஆயிரம் தந்து
பூரணன் கரம் பிடிக்க (க)

ஆண்டவனை நெஞ்சில் ஆண்டு
ஆண்டவனை பற்றி நின்றாள்
ஆண்டில் மாதம் மார்கழியில்
ஆண்டவனை காட்டிய ஆண்டாள் (க)

பாதை காட்டிய கண்ணனின்
பாதம்  காட்டி அருளிய 
கோதையின் திருப்பாவை பாடி
சிவ ராம தாஸன் பணிந்தேனே (க)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

Tuesday, May 19, 2020

நவராத்திரி


நலம் தரும் ராத்திரி....
நவ ராத்திரி.....
முப்பெரும் தேவியர்
அருளிடும் ராத்திரி (ந)

சிம்ம வாஹினியே ஸ்ரீ
வீர துர்கை தாயே
வெற்றி வாகை சூடவே
வீர தைரியம் தருவாய் 

கஜ வாஹினியே ஸ்ரீ
மஹா லஷ்மி தாயே
செவ்வாழ்வு வாழவே பொன்னும் 
பொருளும் தருவாய்

அன்ன வாஹினியே ஸ்ரீ
ஸரஸ்வதி தாயே
கலை ஞானம் பெற்றிடவே
கல்வி ஞானம் தருவாய்

சிவ ராம தாஸன் போற்றிடும்
முப்பெருந் தேவியரே
நவராத்திரி தேவி நாயகியே
நின் பத்ம பாதம் சரணம் !

சந்தர் சோமயாஜிலு @
சிவ ராம தாஸன்

ஆசிரியை வாழ்த்துப்பா














பூத்துக் குலுங்கிடும்
    பூங்கோதைகளே !
பூவிதழ் மலர்ந்திடும்
    புன்னகைப் பூக்களே !

சின்னஞ் சிறு எழில்
    அரும்பு மொட்டாய் 
சிங்காரமாய் வந்த
    பள்ளிச் சிறுமிகளாள் !

பள்ளிப் பருவமொரு
    பசுமை நிறைப் பருவம்
மலரும் நினைவுகளாய் 
    பின் மகிழும் பருவம்

பசு மரத்தாணியில்
    பதிந்தது போலே
நெஞ்சினில் மறையாது
    நிறைந்திடும் நினைவு !

பள்ளிப் படிப்பறிவும்
    நற்பண்பும் குணமும்
நல்லொழுக்கமும் இணைந்து
    கற்றவை நினைந்து

கல்லூரிப் படிப்பில்
    களிப்பு மிகுதியுடன்
காலைப் பதிக்கும்
    கன்னிப் பெண்களே

சிட்டுப் பறவை போல்
    சிறகடித்து பறந்திடினும்
கடமையும் பொறுப்புடன்
    கவனமுடன் பறவாய்

உயர்ந்த இலக்கினை
    உளமார நினைந்து
உழைப்பைக் காட்டுவாய்
    உச்சத்தை எட்டுவாய்

உறுதியுடன் இருந்திடுவாய்
    உயர் நிலை அடைவாய்
வையம் போற்றி வான் புகழுடன்
    வாழ நல் வாழ்த்துக்கள்.

நல்லவை நினைந்து
    நினைத்ததை அடைந்திட
நெகிழ்சசி நிறைந்ததொரு
    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

சொர்க்க வாசல்




வாரீர் வாரீர் 
சொர்க்க வாசல் 
காண வாரீர் 

வைகுந்தன் அருளிடும்
சொர்க்க வாசல் 
காண வாரீர்  (வா)

மார்கழி திங்கள் 
ஆறைந்து திதியாம் 
ஏகாதசி திதியில்

திவ்ய தரிசனம் 
தந்திடும் சொர்க்க 
வாசல் காண வாரீர் 

அடியார் ஆழ்வார்கள் 
போற்றிடும் திருமகள் 
உறை மார்பன் பரம 

பதம் தந்தருளும் 
சொர்க்க வாசல் 
காண வாரீர் (வா)

நான்மறை கோஷம் 
விண்ணைப் பிளந்திட பல்லாயிரத்து ஆண்டு 
நயமுடன் ஒலித்திட  

நாலாயிரப் பிரபந்தம் 
அந்தணர் மொழிந்திட
வெள்ளி எக்காளம் 
எழிலாய் முழங்கிட 

சிவ ராம  தாஸன் 
பணிந்து அழைத்திட 
நானிலம் உய்த்திட  
நாரணன் அருளிட   (வா)


சந்தர் சோமயாஜிலு (@)
      சிவ ராம தாஸன்

ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பிரேமி பாமாலை



பரனூர் மகாத்மா  
     தாள் சரணம் ஸ்ரீ 
பிரேமி அண்ணா 
     தாள் சரணம்      (ப)

சதகம் சதகமாய் 
    துதி தந்து அருளிய
சிரோன்மணியே 
    நின் தாள் சரணம் 
கிரந்தம் கவி மழை  
    பொழிந்தருளிய
கிருஷ்ண தாசனின் 
    தாள் சரணம்  (ப)

வேத வியாசரின் 
    திரு அவதாரமாய் 
வேத வித்துக்களை 
    பகர்ந்து நின்று
வைகுந்தன் மகிமை 
    மொழிந்து நின்று
வையகத்தில் அமுது
    அருளும் ஸ்ரீ குருவே  (ப)

அனு தினமும் 
    கண்ணன் நினைவுடனே
அனுஷ்டானம் தனைக் 
    கடைப்பிடித்து
அருள் மொழிகள் 
    பல தந்து நின்ற ஸ்ரீ
அண்ணா பிரேமி 
    நின் தாள் சரணம் (ப)

வேங்கட மகாத்மியம் 
    அருளி செய்து
வேதாந்தம் தனையே  
    எடுத்து உரைத்து
வரதனின் மகிமையைத் 
    தந்து அருளிய
வேத வித்தகா நின்    
    தாள் சரணம் (ப)

திவ்ய பிரபந்தம்  
    திருவாய் மொழி
திவ்ய க்ஷேத்திரம் 
    திருவெம்பாவை
அடியவர் அருமை 
    பக்தியின் பெருமை 
அருளிய ஸ்ரீ அண்ணா 
    நின் தாள் சரணம். (ப) 

சிவ ராம தாசனுக்கு
    அருள் புரியும்
செந்தமிழ் தேவ மொழி 
    கவி புலமையுடன்
சத்சங்கப் பிரவசனம் 
    பகர்ந்தருளும்
சத்குரு ஸ்ரீ அண்ணா 
    நின் தாள் சரணம் (ப)

பாமர மக்களை 
    உய்க்க வேண்டி
பாரத தேசத்தில் 
     பவனி வந்து
பாகவதம் ராமாயண 
    நாராயணீயம் மா
பாரதம் திருப்பாவை பக்தி 
    பிரவசனம் அருளிடும்

கிருஷ்ணன் மீது அதி 
    பிரேமைக் கொண்டு
கிருஷ்ண கோலாலகன் 
    கோவில் அமைத்து
கிருஷ்ண த்யானமாய் 
    வாழ்ந்து நிற்கும் ஸ்ரீ
கிருஷ்ண பிரேமி 
    சுவாமி தாள் சரணம். (ப)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

நெகிழி



நெகிழி குவியலில் குன்றென
நிறைந்தது நானிலமே
நஞ்சக் குவியலாய் மாறியது
நானிலமே அதனாலே

வேதிப் பொருளாய்
விரைந்து வந்ததே
வேதனையை அள்ளியே
விரைவாய் தந்ததே

எளிதில் மட்காத
பொருள் இதுவே
என்றென்றும் நமக்கிது
கெடுதல் தருமே

நெகிழிக் கழிவுகள் பெரும் 
தொல்லையன்றோ
நெகிழும் தன்மை தனைக்
கொண்டதன்றோ

அன்றாடப் பயன்பாட்டாய்
மாறியது இதுவே
அவதிக்கு உள்ளானோம்
இதனால் தானே

கால்நடைகள் உண்ணுவதால்
பெரும் அவதி அன்றோ
கால்வாய் சாக்கடைகள்
அடைக்கும் அன்றோ

நெகிழிக் குடுவைத் தேனீர்
உடலுக்கு ஊறு அன்றோ
நிலத்தடி நீர் கெடுக்கும்
செய்கைப் பொருளன்றோ

இயற்கையை சீரழிக்கும்
செயற்கைப் பொருளே
இவ்வுலகை பரவி நிற்கும்
நாகரீகப் பொருளே

மாசு தனைப் பரப்பிடும்
தன்மை இதுவே
மாந்தர் குலம் அழிக்க
வந்த பொருள் இதுவே

நெகிழியின் மோகத்தில்
மூழ்கி இருந்தோம்
நோய்களை விருந்தோம்பி
வரவேற்று நின்றோம்

புற்று நோய் தனை
எளிதில் கொணருமே
அணு குண்டைவிட
மோசமான பொருளே

குழந்தைச் செல்வம் 
கெடுத்து மலடு தந்தது
குலம் சந்ததியை
வளர்க்காது கேடு தந்தது

பதப் படுத்தப்பட்ட
நெகிழ் உணவினை
புறப்படுத்துவோம் அறவே
புறப்படுத்துவோம்

மறு சுழற்சி மறு பயன்பாடு
மனதில் கொள்வோம்
மக்கள் இதில் உறுதியாய் 
வெற்றி காண்போம்

விவசாயம் வேளாண்மை
பாதித்தது இதனாலே
வானிலை சுற்றுச்சூழல்
கெட்டது இதனாலே

நெகிழியைத் தவிர்த்தால்
தவிப்பு இல்லையே
நீர் நிலை நிலங்களுக்கு
பாதிப்பு இல்லையே

நெகிழியைத் தவிர்த்தால்
தூய்மைக் கிட்டுமே
இயற்கையைப் போற்றினால்
பசுமை கிட்டுமே

உலகில் நெகிழி வேண்டாமென
உறுதிக் கொள்வோம்
உளமாற விலகாது
உறுதியாய் இருப்போம்

மாசு தனை மூழ்கடிக்கும்
நெகிழைத் தடுப்போம்
மாசு இலா சூழல் தனில்
நிறைவு காண்போம்

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

புல்லாங்குழல்



ம்ருதுவாய் தீண்டிட
கரத்தில் தவழுவாள்
லாவகவாய் முத்தமிட
சிணுங்கி நிற்பாள்

உதட்டில் கவ்விட
மெல்லிய ஒலி எழுப்பி 
வலிப்பது போல
பாவனை காட்டுவாள்

கரமது விளையாட
நெளிந்து வளைவாள்
சுவாசக் காற்றினில்
இன்னிசை தருவாள்

சிருங்கார ரஸமிகு
வெண்ணிற கோலவள்
கண்ணனுக்கு உவந்த
கோகுல கோபியருடன்

ஆயற் பாடியில் அந்திப்
பொழுதில் கரமேந்திட
ஆவினங்கள் சூழ்ந்திட
அதரத்தில் சுவைத்திட

ஜகத்தினை மயக்கிமன
மோகத்தில் ஆழ்த்துவாள்(ன்)
கண்ணனும் இவளால்
நாமம் பல கொண்டான்

வேணு கோபால முரளி
தரன் என நாமம் கொண்டான்
அவளது நாமமோ வெண்குழலே
ஊதும் புல்லாங்குழலே !

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

பீஷ்ம பிதாமகர்


சந்தனு ராஜனின்
நந்த குமாரா
குரு குலம் தோன்றிய
தேவ குமாரா (ச)

அட்டவசு தேவரின்
     அவதாரமே
அகிலமே போற்றிடும்
     அதி அற்புதமே

குரு குலம் காத்த
     சிரோன்மணியே
குருஷேத்ரம் கண்ட
     மகா வீர தீரனே

தன்னிகரிலா
     வில்லாளியே
தர்மம் காத்து நின்ற
     தவப் புதல்வரே (ச)

பிரம்மச்சரிய விரதம்
     பூண்ட தேவவிரதரே
பாகீரதி கங்கையின்
     பவித்ர புத்ரனே (ச)

ஆயிரம் நாமம்
     அருளி நின்றவரே தை
அட்டமி திதியில்
     முக்தி அடைந்தவரே

பரம பக்த பாகவத
     பீஷ்ம பிதாமகரே
பணிந்து போற்றினோம்
     பரம புருஷரே (ச)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

ஆண்டாள்



ஆயிரம் பா 
     அருளி நின்றாள்
அச்சுதன் திருக்
     கரம் பிடித்தாள்
ஆழ்வாரின் 
     எழில் திருமகள்
ஆண்டாள் எனும் 
     பூமகள் (ஆ)

ஆரணனை வரித்து  
     நின்றாள்
ஆறைந்தை அருளி 
     நின்றாள்
அரவணையோன் 
     அருள் பெற்றாள்
ஆராவமுதன் 
     கரம் பிடித்தாள் (ஆ)

கனாக் கண்டு  
     நின்றாள்
கண்ணனைக் 
     கண்டு நின்றாள்
கண்டவனே 
     கொண்டவன் என்றாள்
கொண்டவனோடு 
     கரைந்து நின்றாள்

காரணன் நாரணன் 
     என்றாள் ஜகத்
காரணன் அவனே 
     என்றாள் உலக
பாரணன் 
     சரணடைந்தாள் பரி
பூரண திருவருள் 
     பெற்றாள் (ஆ)

புருஷோத்தமனைக் 
     காட்டி நின்று
பூவைச் சூடிய 
     பூவை அவள்
பாவையெனும் 
     பாமாலை தந்த
பாவையின் 
     திருப்பாதம் சரணம்

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

பொங்கல் நல்வாழ்த்துக்கள்




பொங்கல் எனும்  
    திருநாளில்
மங்கல நன்னாள்   
    இந்நாளில்
பொங்கல் பொங்கி 
    பொங்கட்டும்
மங்களம் சேர்ந்து 
    பொங்கட்டும்

வங்கக் கடல்
    அலைப் போலவே
பொங்கட்டும் 
    மங்களமெங்குமே
பொங்கிய மங்களம் 
    என்றென்றும்
தங்கட்டும் இல்லம்  
    எங்கெங்குமே

எங்கெங்கும் ஒளி   
    வீசும் எழிலொரு
குங்கும வண்ணக் 
    கதிரொளிச் சுடர்
அங்கிங்கு 
    எனாதபடியே
சிங்காரவொளி 
    பரந்து வீசட்டும்

மங்கல பசு 
    கன்று மாடுகள்
மங்கல மணி 
    ஓசை ஒலியுடன்
சங்கத் தமிழ் மரபு 
    பெருமை யாவும்
ஓங்கி பரவட்டும் 
    வையமெங்கும்

நீங்கட்டும் நோய் 
    நொடி யாவும்
மங்கட்டும் எதிர்   
    மறை நிலை யாவும்
தீங்கெல்லாம் நொடியில் 
    ஒழியட்டும்
பங்கய மலர் போற் 
    வாழ்வு மலரட்டும்

ஓங்கட்டும் உழவுத் 
    தொழில் யாவும்
ஓங்கட்டும் குறளும் 
    ஜல்லிக்கட்டும்
திங்கள் தை முதலாம் 
    தினமின்று
திங்களின் பொலிவாய் 
    துவங்கட்டும்

ஐங்கரனின் துணை 
    என்றும் கிட்டட்டும்
திங்களைச் சூடிய 
    சங்கரன் துணை
சங்கரி அருள் மழை 
    பொழியட்டும்
சங்கராந்தியில் 
    நல்லன துவங்கட்டும்

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !



புவனத்தை படைத்த
     பரமன் இறைவன்
புத்தம் புது  புதிய
     புதியதொரு

புத்தாண்டு 2018
     புத்தகம் ஓன்றை
புதிதாய் படைத்தான்
     புவியுலகில் இன்று

பக்கங்கள் முந்நூற்றி 
     அறுபத்தி ஐந்து
பங்கய மலர் போல
     நறுமணம் வீசிடும் 

பக்கங்கள் புரட்டிட
     புரட்டிட புதிய
சிந்தனகள் மனதில்
     உதிக்கட்டுமே

பக்கங்கள் விரிந்திட
     விரிந்திட நமது 
எண்ணங்கள் பரந்து
     விரியட்டுமே

நல்லன யாவும் பல
     நல்கிடும் நன்றே
நினைத்தன யாவும்
     கைகூடும் நன்றே

நோய் நொடி இல்லா
     சுக வாழ்வு தந்திடும்
நீங்காச் செல்வங்கள்
     நாடி வரும் இனிதே

புதியன நல்கிடும்
     புது பரிமாணம் தந்திடும்
புதிய வளர்ச்சி தந்திடும்
     புதிய இலக்கு எட்டிடும்

புத்துணர்ச்சி தந்திடும்
     புதுமை நிறைந்திடும்
புன்னகைப் பூத்திடும்
     புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

சிகண்டி பூர்ணம்



தில்லை தலத்து
     திவ்ய மணியிது
தியானத்தில் ஆழ்த்திடும்
     தெய்வீக மணியிது

சிதம்பர ஆலயத்தில்
     ஒலிக்கும் ஓசையிது
சிங்கார எழில்மிகு
     ஆலய மணியிது

அருட் பெருஞ்சோதி
     அருளிய மணியிது
ஆன்ம அனுபவ உணர்வால்
     அறிந்திடும் மணியிது

இறைநெறித் தந்திடும்
     இசையொலி மணியிது
இரட்டை ஒலி மிகுந்த
     இனிய மணியிது

வள்ளலார்க்கு அருளிய
     வெள்ளி மணியிது
வார்த்தைக்கு எட்டாத
     அனுபவ நிலையது

ஓங்கார நாதன்
     ஒளிவருள் பொழியும்
ஒய்யார ஓசையிது
     ஒப்பிலா மணியிது

சீவனை சிவமாக்கும் 
     சிகண்டி பூரணம் இது
சிற்செவி மடுத்து கேட்டிடுவோம்
     சிவன் அருள் பெற்றிடுவோம்

சந்தர் சோமயாஜிலு

தமிழ் நாடு வங்கப் புயல் சேதம்





சங்கத் தமிழ் வளர்த்த 
தங்கத் தமிழ்நாடு இங்கே
வங்கப் புயல் தனிலே
மங்கிப் போனது இங்கே
கங்கை நதி போலே
எங்கினும் வெள்ளம் இங்கே
தங்கும் குடில் யாவும்
தண்ணீரில் மிதக்குது இங்கே

தன்னிகரா நிலை வேண்டி
தன்னிறைவு பெற்றிடவே
தண்ணீரை இரைந்தோமே
தண்ணீரில் மிதந்தோமே
திண்ணயில் அமர்ந்த வண்ணம்
தண்ணீர் நிலை ஆராய்ந்தோம்
திண்ணையே மூழ்குமளவு
தண்ணீரும் நிறைந்தது இப்போ

சாலைகள் ஒவ்வொன்றும்
கால்வாயாய் மாறியதிங்கே
கரிகாலன் கட்டிய பல
கால்வாயும் தோற்றதிங்கே
அங்கிங்கு எனாதபடி
ஆயிரம் சல்லடை சாலையடி
அங்கிங்கு எனாதபடி
ஆயிரம் குட்டைகள் தோன்றியதடி

என்று தணியும் இந்த 
புயலின் வேகம்
என்று மறையும் இந்த 
மழை தரும் மேகம்
என்று வடியும் இந்த 
மழை நீர் தேக்கம்
என்று முடியும் இந்த 
மானுடர் ஏக்கம்

சாலை தனை மேம்படுத்தி
பாலம் பல கட்டி வைத்தால்
மழை தனை சேமித்து
நீர் நீக்கம் அமைத்து விட்டால்
வழி நெடுக மரம் வைத்து
எழிலொரு வழி செய்தால்
சிங்காரச் சென்னை இங்கே
செந்தமிழ்நாடு பெற்றிடுமே

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்