Tuesday, May 19, 2020

ஆண்டாள்



ஆயிரம் பா 
     அருளி நின்றாள்
அச்சுதன் திருக்
     கரம் பிடித்தாள்
ஆழ்வாரின் 
     எழில் திருமகள்
ஆண்டாள் எனும் 
     பூமகள் (ஆ)

ஆரணனை வரித்து  
     நின்றாள்
ஆறைந்தை அருளி 
     நின்றாள்
அரவணையோன் 
     அருள் பெற்றாள்
ஆராவமுதன் 
     கரம் பிடித்தாள் (ஆ)

கனாக் கண்டு  
     நின்றாள்
கண்ணனைக் 
     கண்டு நின்றாள்
கண்டவனே 
     கொண்டவன் என்றாள்
கொண்டவனோடு 
     கரைந்து நின்றாள்

காரணன் நாரணன் 
     என்றாள் ஜகத்
காரணன் அவனே 
     என்றாள் உலக
பாரணன் 
     சரணடைந்தாள் பரி
பூரண திருவருள் 
     பெற்றாள் (ஆ)

புருஷோத்தமனைக் 
     காட்டி நின்று
பூவைச் சூடிய 
     பூவை அவள்
பாவையெனும் 
     பாமாலை தந்த
பாவையின் 
     திருப்பாதம் சரணம்

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: