Friday, May 15, 2020

ஜல்லிக்கட்டு



தமிழரின் வீரம்

நிலை நாட்டிடும்

தமிழரின் பெருமை

பறை சாற்றிடும்

 

தமிழரின் புகழ்

தரணியில் ஓங்கும்

தமிழகத்தின் வீர

விளையாட்டு இது.

 

புழுதிகள் பறந்திடும்  

பாய்ந்து ஓடிடும்

பார்வைகள் விரிந்திடும்

பாவைகள் விரும்பிடும்

 

மாட்டுக்கொம்பை

மண்ணில் சாய்த்திடும்

மண்ணின் மைந்தரின்

மான மரபு விளையாட்டு.

 

கன்னியரைக் கவர்ந்திட

களத்தினில் இறங்கி நின்று

காளையை அடக்கிடும்

காளையரின் விளையாட்டு.

 

தொன்மையாய் இருந்திடும்

தொன்று தொட்டு வந்திடும்

தின்னமிகு வீர  தீர

தில்லான விளையாட்டு.

 

ஆடவர் காளைகளை

அடக்கி வீழ்த்திட

அஞ்சா சிங்கம் கண்ட

அலங்காநல்லூர் இது.

 

மாட்டுக் கொம்பிடையில்

சல்லிக் கட்டு தனை

தில்லாய் எடுத்திடும்

சாகஸ விளையாட்டு.

 

பாரம்பரியம் மிக்கவொரு

பண்பாட்டு மிக்கவொரு

பரம்பரை கலாச்சார

புகழ்மிகு விளையாட்டு.

 

தமிழரின் உரிமையை

நிலைநாட்டும் விளையாட்டு.

தமிழரின் தன்மானம்

காக்க வந்த விளையாட்டு.

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: