Tuesday, May 19, 2020

ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பிரேமி பாமாலை



பரனூர் மகாத்மா  
     தாள் சரணம் ஸ்ரீ 
பிரேமி அண்ணா 
     தாள் சரணம்      (ப)

சதகம் சதகமாய் 
    துதி தந்து அருளிய
சிரோன்மணியே 
    நின் தாள் சரணம் 
கிரந்தம் கவி மழை  
    பொழிந்தருளிய
கிருஷ்ண தாசனின் 
    தாள் சரணம்  (ப)

வேத வியாசரின் 
    திரு அவதாரமாய் 
வேத வித்துக்களை 
    பகர்ந்து நின்று
வைகுந்தன் மகிமை 
    மொழிந்து நின்று
வையகத்தில் அமுது
    அருளும் ஸ்ரீ குருவே  (ப)

அனு தினமும் 
    கண்ணன் நினைவுடனே
அனுஷ்டானம் தனைக் 
    கடைப்பிடித்து
அருள் மொழிகள் 
    பல தந்து நின்ற ஸ்ரீ
அண்ணா பிரேமி 
    நின் தாள் சரணம் (ப)

வேங்கட மகாத்மியம் 
    அருளி செய்து
வேதாந்தம் தனையே  
    எடுத்து உரைத்து
வரதனின் மகிமையைத் 
    தந்து அருளிய
வேத வித்தகா நின்    
    தாள் சரணம் (ப)

திவ்ய பிரபந்தம்  
    திருவாய் மொழி
திவ்ய க்ஷேத்திரம் 
    திருவெம்பாவை
அடியவர் அருமை 
    பக்தியின் பெருமை 
அருளிய ஸ்ரீ அண்ணா 
    நின் தாள் சரணம். (ப) 

சிவ ராம தாசனுக்கு
    அருள் புரியும்
செந்தமிழ் தேவ மொழி 
    கவி புலமையுடன்
சத்சங்கப் பிரவசனம் 
    பகர்ந்தருளும்
சத்குரு ஸ்ரீ அண்ணா 
    நின் தாள் சரணம் (ப)

பாமர மக்களை 
    உய்க்க வேண்டி
பாரத தேசத்தில் 
     பவனி வந்து
பாகவதம் ராமாயண 
    நாராயணீயம் மா
பாரதம் திருப்பாவை பக்தி 
    பிரவசனம் அருளிடும்

கிருஷ்ணன் மீது அதி 
    பிரேமைக் கொண்டு
கிருஷ்ண கோலாலகன் 
    கோவில் அமைத்து
கிருஷ்ண த்யானமாய் 
    வாழ்ந்து நிற்கும் ஸ்ரீ
கிருஷ்ண பிரேமி 
    சுவாமி தாள் சரணம். (ப)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: