Friday, May 15, 2020

பகிரும் பாகற்காய்

பச்சிளம் நிறத்தில்

இருக்கும் எனக்கு

பாகற்காய் என்னும்

பெயர் எனக்கு (ப)

 

கற்கண்டு போல நான்

இனிப்பதில்லை

கசப்பு பரம்பரையில்

வந்த காய் நானே

கசப்பு என்றாலே

விஷம் அல்லவே

கருத்தாய் குணமாக்கும்

அரு மருந்து நானே (ப)

 

புழுக்கள் ஒட்டுண்ணி

எட்டிப் போகும்

ஒவ்வாமை வீக்கம்

போக்க உதவும்

இரைப்பை பிரச்சனை

தீர்க்க உதவும்

இயற்கை வழி வந்த

தாவரம் நானே (ப)

 

இதய நோய் காக்கும்

விதை நானே

கொழுப்பை அகற்றி

அடைப்பு வாராது

ரத்த சோகை புற்று

நோய் வாராது

தடுக்கும் ஆற்றல்

எனக்கு உண்டே (ப)

 

எலுமிச்சை சாற்றுடன்

சேர்ந்து பருகிட

தோல் நோய் தனை

தீர்ப்பேன் நானே

சூட்டைக் கிளப்பும்

குணம் கொண்டதால்

அளவோடு  சாப்பிட

நலம் தருவேனே (ப)

 

சீரகத் தூளுடன் என்

சாறு பருகிட விஷ

சுரம் தனை அகற்றும்

மருந்து நானே

முடி கொட்டாது நல்

தீர்வினை தருவேன்

பற்பயன் நல்கும் பாகற்காய்

எனை நீ தள்ளாதே (ப)

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: