Wednesday, May 20, 2020

பிரதோஷம்


இந்நாள் நன்னாள்
    பொன்னாள்
இக பர சுகம் தரும்
    நன்னாள் (இ)

திங்களைச் சூடிய
    நாதன் இங்கே
திவ்யத்திரு நடனம் 
    ஆடிடும் நாள்

திவ்ய நந்தி மீது
    ஆடிடுவார்
திவ்ய தரிசனம்
    தந்திடுவார் (இ)

தைத் திங்கள் எனும்
    இம்மாதத்தில்
திருவாதிரை எனும்
    நட்சத்திரத்தில்

திங்கட் கிழமை
    திரயோதசி திதி
பிரதோஷ கால
    நடனமாடும் (இ)

முக்கண்ணார்க்கு உகந்த
    திதி கிழமை  நட்சத்திரம்
மூன்றும் சேர்ந்து நின்று
    முக்கூடலாய் கூடும்

முத்தான பிரதோஷ
    கால இந்நாளே
மகிமை நிறைந்த
    பொன்னாளே (இ)

அபூர்வ பிரதோஷ
    திரு நாளாம்
அனைத்து சகல
    சௌக்கியம் தந்திடும்

பிர தோஷ பூசையில்
    வழி படுவோம்
பிறை சூடிய நாதன்
    அருள் பெறுவோம் (இ)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: