Friday, May 15, 2020

மௌன மொழி


விழி இரண்டும்

பேசி நின்றால் வாய்

மொழி பேசிட

தேவை உண்டோ

 

ஆயிரம் மொழிகளில்

பேச துடிக்கும்

தூய இரு விழிகளின்

சங்கமம் அன்றோ

 

பாயும் நதி வேகம்

தடை படலாம்

சேரும் இவ்விழிகளுக்கு

வேகத் தடையுண்டோ

 

பிரிந்தவர் கூடினால்

மொழிக்கு இடமேது

கூறும் மொழி யாவும்

மௌன மொழியன்றோ

 

கன்னித் தமிழ் காக்கும்

மௌனம் இதுவே

காதல் தேவதைகள்

பேசிடும் மொழியிதுவே

 

நெஞ்சத்தை ஈர்த்திடும்

அன்பு மொழியன்றோ

ஒன்றென கலந்திடும்

காதல் மொழியன்றோ


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்



No comments: