Friday, May 15, 2020

துவளாதே


மனம் உடைந்தால்

துவளாதே கண்ணா

நீ துவளாதே துவளாதே (ம)

 

உடையும் நெல்லில் தான்

விதை தோன்றும்

உடைந்த விதை தனில்

செடி மரம் தோன்றும்

உடைந்த நிலமது தான்

உழும் வயல் ஆகும்

உடைந்த கரு மேகம்

வான் மழையாகும் (ம)

 

உடைந்த பாறைகள்

சிறு ஜல்லி ஆகும்

உடைந்த மரம் தான்

கட்டில் ஆகும்

உடைந்த தேங்காய்

இளநீர் தாரும்

உடைந்த கரும்பில்

வெல்லம் தோன்றும் (ம)

 

உடைந்த கருங்கல்லில்

சிலை தோன்றும்

உடைந்த சிப்பியில்

முத்து தோன்றும்

உடைந்த இரும்பில்

கூர் வாள் தோன்றும்

உடைந்த கல்லில்

வைரம் தோன்றும் (ம)

 

உடைந்த மனதில்

வைராக்கியம் தோன்றும்

உடைந்த மனதில்

தெளிவு தோன்றும்

உடைந்த மனதில் புது

எண்ணம் தோன்றும் 

உடைந்த மனதில்

புது வழி தோன்றும் (ம)

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: