Friday, May 15, 2020

பாதுகாப்பு 1

உயிர் வாழ்ந்திட நல் சுவாசம் தேவை

நல் சுவாசத்திற்கு இயற்கைத் தேவை

இயற்கையைக் காத்திட மரம் தேவை

மரத்தை வளர்ப்போம் உயிர் வாழ்வோம்..

 

இயற்கையைப் போற்றிக் காத்து விடின்

இனிதாய் நம் வாழ்வைக் காத்திடுமே

இயற்கையைக் கண்டும் காணாவிடில்

இனிய வாழ்வை நாம் இழப்போமே.

 

முத்தைக் காத்திடும் சிப்பிப் போல

மூளையைக் காத்திடும் ஓடு போல

ரோசாவைக் காத்திடும் முள் போல

கன்றினைக் காத்திடும் பசு போல

 

சேயினைக் காத்திடும் தாய் போல

பெண்மையை நாம் காப்போமே

பாலியல் கொடுமையைத் தடுப்போமே

பண்பினை நன்கு வளர்ப்போமே

 

இரு சக்கர வாகன ஓட்டுனர்க்கு

தலை விதி யாவும் என்றுமே

தலையில் எழுதப் படுவதில்லை

தலைக் கவசத்தில் அன்றோ

 

பணி புரியும் இடம் தனிலே

பாதம் தனைக் காத்திடவே

பாதுகாப்பு காலணி அணிவது

பாதுகாப்பு தரும் அன்றோ.

 

விளைவை யாவரும் அறிந்திடினும்

வினை என்று தெரிந்திடினும்

மதுவினை நாடுதல் ஏனோ

மயக்கத்தில்  வீழுதல் ஏனோ.

 

குழி தனில் தள்ளிடும்

குடி தனைக் கெடுத்திடும்

குடியைக் கவலையில் ஆழ்த்திடும்

குடியும் புகையும் ஏனோ ஏனோ

 

கல்லீரலை அழித்திடும்

கவலையைத் தந்திடும்

கல்லறையில் சேர்த்திடும்

கள் குடி தான் ஏனோ ஏனோ

 

மதியை மயக்கிடும்

விதியை மாற்றிடும்

சதியைப் புரிந்திடும்

மது தான் ஏனோ ஏனோ

 

ஐந்தெழுத்து மந்திரம் பாதுகாப்பு

ஐயமின்றி நம்மைக் காத்திடுமே

பாதுகாப்பு என்றும் முதன்மையன்றோ

மற்றவை யாவும் பிறகு அன்றோ....

 

சிதறாக் கவனமும் பதறா மனமும்

உதறா விதிமுறையும் தவறாப் பயிற்சியும்

உபாயமாய் நமக்கு துணை நின்றிடுமே

அபாயம் தனை விலக்கிடுமே...

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம  தாஸன்


No comments: