Friday, May 15, 2020

கொரோனா - தனித்திரு மனிதா


தனித்திரு மனிதா

தனித்திரு இன்று

ஒரு நாள் தனித்திரு

மனிதா தனித்திரு (த)

 

விழித்திரு நடப்பன

யாதென விழித்திரு

சுய ஊரடங்கு தனை

நடத்திரு நடத்திரு (த)

 

தனித்திரு இருந்திட

பரவல் சங்கிலியில்

இடைவெளி வருதலால்

பரவல் தடுக்குமே (த)

 

கிருமியை அழிப்பதில்

மனம் இணைந்திரு

பரவல் சங்கிலியை

தகர்த்திடு தகர்த்திடு ()

 

கரம் குவித்திரு கரம்

தட்டிடு மருத்துவர்

சேவை பாராட்டி நீ

கரம் தட்டிடு தட்டிடு (த)


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: