Monday, May 11, 2020

நர்த்தன கணபதியே துணை



 

நர்த்தன கணபதயே
    நமோ நமோ
நவ கோள் நாயக
    நமோ நமோ (ந)

ஆல கால விடமுண்ட
    ஆதிரை நாதன்
ஆய கலை அறுபத்தி
    நான்கினில்
ஆடல் கலையின்
    நாயகன் மைந்தன்
ஆனை முகமுடன்
    எழிலாய் ஆடிடும் (ந)

நம்பிக்கை நல்கிடும்
    தும்பிக்கை ஆட
நவரத்தின மாலையும்
    மார்பினில் ஆட
நவ கோள் தேவரும்
    வணங்கி நின்றிட
நவ ரஸ பாவமுடன்
    நடம் தனை புரியும் (ந)

சிரசினில் தரித்த மகுட
    மரகதம் மிளிர்ந்திட
சிருங்கார பாவமுடன்
    அபிநயம் புரிந்திடும்
சித்தி புத்தி நாயகனின்
    அருளை வேண்டி
சிவ ராம் தாஸன்
    பணிந்து நின்றிட (ந)

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம் தாஸன் 

 

1 comment:

Unknown said...

வெகு அருமை