Thursday, May 14, 2020

குடை

ஆண்டி முதல் ஆண்டவன்

வரை எனை ஏற்பர்

அட்டங் கருமையிலும்

நான் இருப்பேன்

அழகு வண்ணத்திலும்

நான் மிளிர்வேன்

குடை என்னும்

பெயர் கொண்டேன்

 

கரு மேகம் சூழ்ந்து

நின்றால் எனை தேடுவர்

கொளுத்தும் வெயில்

என்றாலும் எனை நாடுவர்

மழை நீரில் நனையாமல்

நான் காப்பேன்

சுடரொளி கதிர் வீச்சு

தடுத்து காப்பேன்

 

செங்கோலேந்தி ஆட்சி

புரியும் கொற்றவனுக்கு

வெண் கொற்றக் குடையாய்

வீ தி உலா வருவேன்

வேங்கட மலை நின்று

அருளும் ரமணனுக்கு

வெண் பட்டுக் குடை

சேவையில் பவனி வருவேன்

 

காற்று மழை வெயில் யாவும்

தாங்கி நிற்பேன்

மாந்தர் மனம் மகிழ

நான் விரிந்திருப்பேன்

தளர்ந்த முதியோருக்கு

ஊன்று கோலாயிருப்பேன்

தற்காப்பு ஆயுதமாயும்

துணையாய் இருப்பேன்

 

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: