Thursday, May 14, 2020

கத களி


கத களி அறியாயோ நீ

கத களி அறியாயோ மனமே நீ (க)

 

எழில் கேரளத்து மாநில

பாரம்பரிய நடனமிதுவே

எண்ணெய் விளக்கு முன்னே

ஆடும் நர்த்தனமிதுவே

காண்போர் களித்த்திட

கதையைக் கூறி நின்று

களிப்பைத் தந்து நின்று

காளி விளக்கு முன் ஆடும் (க)

 

கண்ணைக் கவர்ந்து நிற்கும்

வண்ண ஆடையுடுத்தி

முகம் அதில் பல நிற

வண்ணம் பூசி நின்று

கை அசைவு நெளிவு தனில்

முத்திரை காட்டி நின்று

முக அசைவு நளினத்தில்

நவ ரசம் காட்டி நிற்கும் (க)

 

சங்கீத சாகித்யம் சுட்டி

ந்ரித நாட்டிய அம்சமுடன்

சிவ ராம தாஸன் புனையும்

பாமாலை மொழிந்திடும்

எழிலொரு நடனமிதுவே

ஏற்றம் மிகு நடனமிதுவே

ஆடவர் முனைந்து ஆடும்

ஆடும் கலை இதுவே (க)

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்

 


No comments: