Thursday, May 14, 2020

சதுரங்கம்


சதுரமய போர் களம் தனிலே

சதுர வித வீரப் படைகளுடனே

சாதுர்யமாய் விளையாடுவதே

சதுரங்கம் எனும் விளையாட்டே (ச)

 

நேர் கொண்டப் பாதையிலும்

பக்கவாட்டு வழிப் பாதையிலும்

கம்பீர நடையிலே படைகளைை

பந்தாடும் இரு ஆனைகளும் (ச)

 

குறுக்கு கோடு வழி தனிலே

வீர தீரமாய் சண்டையிடும்

எதிரிப் படையை சாய்த்து

போரிடும் இரு ஒட்டகங்களும் (ச)

 

குறுக்கில் வளைந்து நகர்ந்திடும்

குதித்து தாண்டி சென்றிடும்

குருதி வெள்ளம் ஆக்கிடும்

குதிரை இரண்டு போரிடும் (ச)

 

நாட்டின் மன்னனைக் காத்திட

நகர்ந்து மெதுவாய் சென்றிடும்

நடையாய் முன்னே போரிடும்

நாவிரு காலாட்படை கொண்ட (ச)

 

நடு நாயகமாக வீற்றிடும் ராஜாவை

நான்கு வழியிலும் சென்று வந்து

நன் முறையினில் போர் புரிந்து

நடுங்க வைக்கும் இரு ராணிகளும் (ச)

 

புத்திக் கூர்மை அறிவு சார்ந்த

நுணுக்கமான விளையாட்டு

கவனமுடன் விளையாடும்

எட்டெட்டு கலையில் ஒன்றே (ச)

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: