Thursday, May 14, 2020

தமிழ் போற்றிய ராஜ ராஜ சோழன்


தஞ்சை கோபுரம்

தந்து அருளிய

தவப் புதல்வனவன்

தமிழ் காத்த மன்னவன் (த)

 

தமிழ் மீது பற்று கொண்ட

சோழ வேந்தனவன்

தமிழ் போற்றி வளர்த்து நின்ற

தானைத் தலைவனவன்

 

தமிழுக்குப் பெருமை

அருமை சேர்த்தவனவன்

தமிழகம் கண்டு நின்ற

ராஜ ராஜ சோழனவன்

 

தமிழின் உயிரெழுத்து

ஈராறே

சிவலிங்கம் உயரமும்

ஈராறே

 

தமிழின் மெய்யெழுத்து

மூவாறே

ஆவுடை பீடமுயரமும்

மூவாறே

 

தமிழின் உயிர்மெய்யெழுத்து

இரு நூற்றி பதினாறே

கோபுரத்தின் உயரமும்

இரு நூற்றி பதினாறே

 

நற்றமிழ்  எழுத்துக்கள்

இருநூற்று நாற்பத்தி ஏழே

நந்தி சன்னதி தூரம்

247 அடியே

 

தலை கோபுர நிழல்

தரையில் வீழாத

சிற்பங்கள் நிறைந்ததொரு

பிரம்மாண்ட கோவில்

 

தட்சண மேரு மலை

தந்த ராஜனவன்

தமிழர்க்கு பெருமை

       சேர்த்த வேந்தனவன்

 

ஏடு தந்த நாதனவன்

ஏற்றமிகு காவலனவன்

சாணக்கிய சாதுர்ய

சோழ வேந்தனவன்

 

நுண்ணிய நுட்பம்

கொண்ட நாதனவன்

நான்மறை கூற்றுப்படி

நாடு ஆண்டவன்

 

அக்கையார் குந்தவையின்

அறிவுரை வழியிலே

அறம் போற்றி வளர்த்த

அரசனவன்

 

வாழிய வாழிய

ராஜ ராஜ சோழன் நாமம்

வளர்க வளர்க

அவரது புகழ் என்றென்றும்.


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்