Thursday, May 14, 2020

ஓணம்


ஓணமடி ஓணம்

எங்கள் திருவோணம்

கேரளத்து தொன்மை மிகு

பண்டிகைத் திருவோணம் (ஓ)

 

மாபலி மன்னவனை

வரவேற்றிடும் திருவிழா

மலர் தூவி  மன்னவனை

எதிர் நோக்கும் திருவிழா

மகிழ்ச்சி கரமானதொரு

               கேரளத்து திருவிழா

மங்களம் நிறைந்ததொரு

               அறுவடைத் திருவிழா (ஓ)

 

காக்கப்பூ தேச்சிப்பூ சேதிப்பூ

               முக்குட்டி செம்பருத்தி

அனுமன் கிரீடம் தும்பை

               கொங்கிணிப்பூ கொண்ட

அத்தப்பூ பூக்கோலமிட்டு

               வரவேற்கும் திருவிழா

பத்து நாட்கள் கோலமிட்டு

               வரவேற்கும் திருவிழா (ஓ)

 

இளமஞ்சள் நிறமுடனே

               தங்க வண்ண சரிகை யுடனே

பாரம்பரிய உடை தனிலே

               உடுத்தி கொண்டாடிடுவரே

அடை பிரதமன் அடை அவியல்

               காலன் ஓலன் பருப்பு நெய்யுடன்

கூட்டு கிச்சடி பச்சடி  சீடை   பப்படம்

               சாதமதை இறைக்கு படைப்பரே (ஓ)

 

படகுப்போட்டி, ஓண ஊஞ்சல்

               கோலமிட்டு கொண்டாடி

வண்ணமிகு அலங்காரமுடன்

               ஆனைகள் ஊர்வலமே

வாமன நாரணனைப் பணிந்து

               பக்த சிவ ராம தாஸன் போற்றும்

கேரளத்து திருவோணம்  திருவிழா

               பண்டிகைத் திருவிழா  (ஓ)

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: