Thursday, May 14, 2020

சீமைக் கருவேலமரம்


சீமையில் இருந்து வந்தவையாம்

சிறு சிறு விதைகளாய் இருந்தவையாம்

சாலையில் மா மரமாய் வளர்ந்தவையாம்

சமையலில் விறகாய் உதவுபவையாம்

 

வேர்கள் நீண்டு ஆழ வளர்பவையாம்

வேளாண்மையை அறவே அழிப்பவையாம்

வறட்சி நிலமாய் மாற்றுபவையாம்

விளை நிலத்தை அழிப்பவையாம்

 

நிலத்தடி நீரை அடியோடு உறிஞ்சிடுமாம்

நச்சுத் தாவரமாய் வளர்ந்திடுமாம்

எவ்வொருப் பூச்சியாலும் பாதிக்காது

ஏனையத் தாவரங்களை அழித்திடுமாம்

 

பயிர் காக்கும் வேலியாய் நின்றவையாம்

பக்க வேர்களிலால் வளர்ந்து நிற்பவையாம்

ஈரப் பதத்தையே உறிஞ்சி நிற்பவையாம்

மழை நீரையேத் தடுத்து நிற்பவையாம்

 

நாற்பது அடி உயரம் வளர்பவையாம்

நெடுநெடுவென நீண்டு நிற்பவையாம்

நல் மஞ்சள் பூவைக் கொண்டவையாம்

நச்சுக் காற்றை வெளித் தள்ளுபவையாம்

 

விவசாயி வாழ்வைக் கெடுத்தவையாம்

தான் மட்டும்  செழிப்பாய் இருந்திடுமாம்

வேலிக்காத்தான் எனப் பேர் கொண்டு

வேதனை தந்திடவே வந்தவையாம்

 

அந்நிய சீமைக் கருவேலம் மரங்களை

அடியோடு அறுத்து எறிந்திடுவோம்

அல்லல் தனைப் போக்கி நின்று

ஆனந்தம் பொங்கிட வாழ்ந்திடுவோம்.


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: