Friday, May 15, 2020

நமஸ்தே வந்தனம்


வந்தனம் போதுமே இரு

கர வந்தனம் அதி மிகு நலமே

கை கொடுத்தலும்  கரம்

குலுக்கலும் தவிர்த்தல் நலமே  ()

 

இரு கரம் குவித்து கூப்பி

வந்தனம் செய்திடுவோம்

இரு மனம் குளிர்ந்திட கர

வந்தனம் புரிந்திடுவோம்

 

தொடுதலால் பரவிடும் நோய்

வாய்ப்பு அறவே இலையே

தொன்று தொட்டு காலமாய்

இருந்திடும் வழக்கமிதுவே (வ)

 

பண்டையக் கால பாரம்பரிய

நம் பாரத தேசத்தின்

 போற்றுதற்கும் பெருமைக்கும்

உரிய வணக்க முறையிதுவே

 

மேற்கத்திய நாகரீக மோகம்

நம் கண்ணை மறைத்தது

மேவிய நம் நாட்டு கலாச்சாரப்

பண்பும் மறைந்ததது

 

வணக்கம் வந்தனம் நமஸ்தே

என பலவாய் பகரலாம்

வரும் முன் நோய் களையும்

வணக்கம் முறையிதுவே  ()

 

விழி போன பின்னே சூரிய

வந்தனம் பிரயோசனமோ ?

விழித்து கொள் முழித்து கொள்

பிழைத்து கொள் மனமே !

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: