Thursday, May 14, 2020

இந்திய விண்வெளி ஆய்வு மையம் சந்திராயன் 2


வையகத்து பாமரர்க்கும்

விண்வெளி விழிப்பு

உணர்வினை எழிலாய்

தந்தது சந்திராயனே

 

பெருமையும் திறமையும்

ஒரு சேர கொண்டதே

எம் இந்திய விண்வெளி

ஆய்வு மைய அமைப்பே

 

இந்தியக் குடி மகனாய்

பெருமை கொண்டேன்

இஸ்ரோ இந்திய விண்வெளி

விஞ்ஞானி அறிவாலே

 

விண்வெளி ஆய்வில் இதுவொரு

தற்காலிக பின்னடைவே

கடின உழைப்பும் முயற்சியும்

பாராட்டி போற்றத் தக்கதே

 

தோல்விகள் என்றும்

ஒரு தடைக்கலல்ல

வெற்றிக்கு உதவிடும்

படிக்கட்டுக்களே

 

வெற்றி என்பதொரு

இறுதிப் புள்ளியாம்

தோல்வி என்பது ஒரு

இடைப் புள்ளியாம்

 

இடைப் புள்ளிகளை யாவும்

இணைக்காது போயின்

இறுதிப் புள்ளியினை

எட்டுவது சாத்தியமோ

 

அப்துல் கலாம் அய்யா

மொழிந்ததை அன்று

உந்தன் நினைவில் கொள்ள

எடுத்துரைத்தேன் நான் இன்று

 

அன்பு மிகு திரு சிவனே உம்

எண்ணத்திலே தோல்வியில்லை

பின்பு ஏன் மனதில் ஓர் கலக்கம்

இரு விழிதனில்  நீர் தேக்கம்

 

தொடாத விடு தூரத்தில் செல்ல

முயன்ற உம் குழு நண்பருக்கு

தொடு தூரம் தூரத்தில் உள்ளது

நாளை வெற்றிக் கனியே

 

துவளாதே துவண்டு போகாதே

உம்மால் முடியும் முடியும்

இன்று இல்லை என்றால் என்ன

நாளை வெற்றி உம் கையில்

 

இந்திய தேசமே உம் பக்கம்

வேண்டாமே மனக் கலக்கம்

நம்பிக்கை கொண்டோம் உம்மிடம்

நம்பிக்கை கொள்வாய் நீவிருமே

 

சவால்கள் சோதனைகள் யாவையுமே

சாதனைக்கு முன் எம்மாத்திரம்

சந்திரனை விரைவில் எட்டியே

சரித்திரம் சகாப்தம் படைப்பாயே

 

சந்திராயன் பாகம் மூன்றிலே

விண்வெளிப் பாதையில் நாளையே

காணுவாய் நீ வெற்றிப் பாதையே

பெருமை கொள்வோம் பாரதமே !

 

 

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: