Thursday, May 14, 2020

Dr. APJ அப்துல் கலாம் - 1


ஏழ்மை குடும்பத்தில் பிறந்து வளர்ந்து

உழைப்பினால் உயர்ந்து நின்று காட்டி

எளிமையாய் வாழ்ந்து பண்பாய் நின்று

சிகரத்தை தொட்ட தலை மகனே !

 

மார்க்கம் உயர்வாய் நினை என ஊக்கம் தந்து

நோக்கம் தனை அடைய  தாக்கம் தந்து

ஆக்கப் பூர்வமாய் அயராது உழைத்து

தீர்க்க தரிசியாய் வாழ்ந்த மகானே !

 

விளக்கை ஏற்றுதனிலே இந்துத்வம் கண்டாய்

விளக்கு திரி தனிலே கிருத்துவம் கண்டாய்

ஏற்றும் உன் தனிலே இஸ்லாம்யம் கண்டாய்

விளக்கொளி தனிலே மத நல்லிணக்கம் கண்டாய் !

 

தனுஷ் கோடியில் பிறந்த நீ

முதல் குடி மகனாய் உயர்ந்தீரே

நூற்றி முப்பது கோடி மக்களுமே

போற்றிப் புகழும் பொக்கிஷம் நீ !

 

துணிவு கொண்டு பெரும் லட்சியத்தை

மாணவ மணிகளை ஊக்குவித்து

கனவு காணுங்கள் எனக் கூறி

நனவு ஆக்கிட உழைத்திடு என்றீரே !

 

இருபது இருபதாம் ஆண்டு தனிலே

இந்திய நாடு தலைசிறந்து நின்றிட

வல்லரசு நாடாக உயர்ந்து நின்றிட

கனவு கண்ட விருதுகள்  நாயகனே !

 

அக்னி புத்ரியை விண்ணுக்கு தந்து

அக்னி சிறகுகளை மண்ணுக்கு தந்து

அக்னி ஏவுகணை நாயகனாய் நின்று

அக்னி ஜுவாலயாய் ஒளிர்ந்து நின்றீரே !

 

விஞ் ஞானியாய் உழைத்து உயர்ந்து

கலை ஞானியாய் கவிதை இயற்றி

அஞ் ஞானத்தை  விலக்க வந்த

மெய் ஞானச்சுடர் தீப  விளக்கே !

 

பிறப்பு என்பது சம்பவமே

இறப்பு என்பது சரித்திரமே என

உழைப்பினால் சிகரம் எட்டிய

திருநாடு கண்ட பாரத ரத்தினமே !

 

அரும் பெரும் காண்பதே லட்சியம்

சிறு கனவு பெரும் குற்றம் என

இறுதி மூச்சு வரை உரை ஆற்றிய

திருமணம் கானா பேராசியரே !

 

கட்டுரை பல தந்தவன் நீ

கவிதையும் பல தந்தவன் நீ

இசையில் நாட்டம் கொண்டவன் நீ

வீணையும் இசைத்திட்ட மேதை நீ !


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்



No comments: