Saturday, July 18, 2020

கரும வீரர் காமராஜர் 1








அரிச்சுவடி அறியாத
     படிக்காத மேதையவர்
ஆரவாரம் ஏதுமிலா
     அரசியல் தலைவரவர்

இலவச மதிய உணவு
     அளித்த வள்ளலவர்
ஈடுபாடுடன் பணி புரியும்
     கடமை கரும வீரரவர்

உழைப்பின் உவமையவர்
     உத்தம மாமனிதரவர்
ஊழியச் சேவகனவர்
     ஊர் புகழ் வித்தகரவர்

எள்ளளவும் கறையிலா
     எளிமையின் சிகரமவர்
ஏழ்மையின் பசி தீர்த்த
     ஏழையின் தோழரவர்

ஐயமிலா பெருந்தலைவரவர்
     தூயமிகு நேர்மையாளர்
ஒத்துழையாமை சத்தியாக்கிரக
     விடுதலை போராட்ட வீரரவர் 

ஓங்கி வான் புகழ் பெற்ற
     தென்னாட்டு காந்தியவர்
ஔவையின் இலக்கணம்படி
     மும்முறை ஆட்சி தனில்

பொற்கால ஆட்சி தந்த
     இணையிலா முதல்வரவர்
கல்விக் கண் திறந்த 
     தன்னலமற்ற தமிழனவர்

நீர் நிலை நிறைந்திடவே
     அணைகள் பல தந்தவரவர்
தொழில் வளர்ச்சி தந்து
     நின்ற தீர்க்க தரிசி அவர்

இஃதே தரணி போற்றும்
     காமராஜர் வரலாறு இது
வாழ்க வாழ்க காமராஜர் 
     வளர்க அவர் தம் புகழ் !


சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

Wednesday, July 1, 2020

மருத்துவர் தினம்






01 07 2020

மாதா பிதா குருவிற்கு
        பின்னே தெய்வமென்பர்
மாதாவைக் காட்டி நின்ற
        மருத்துவரும் தெய்வமே (ம)

தன்னுயிர் பாராது
        தன்னலம் காணாது
மண்ணுலகு மாந்தர்
        இன்னுயிர் காக்க

கண் விழி துஞ்சாத
        மருத்துவர் குலமே
விண்ணுலகு உலவும்
        விந்தைமிகு இறைவனே (ம)

நாடி தனைக் கண்டே
        நோய் அறிவார்
விழி தனை விரித்தே
        தீவிரம் அறிவார்

இருதயத் துடிப்பிலே
        இன்னல் அறிவார்
வாய் நாவு கண்டு
        நொடி காண்பார் (ம)

வரும் முன் மருந்து
        காண்பரும் அவரே
வந்த பின் மருந்து
        தருபவரும் அவரே

வாளால் அறுத்திடினும்
        நலம் காண்பாரே
வாழ்வினைக் காத்திட
        வழி காண்பாரே (ம)

இன்னுயிர் காக்கும்
        தன்னலமற்ற சேவை
இந்நாளில் மாந்தர்க்கு
        மண்ணுலகு தேவை

இரு கரம் கூப்புவோம்
      சிரம் தனை தாழ்த்துவோம்
மனதார வாழ்த்துவோம்
மருத்துவரைப் போற்றுவோம்.

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்


Sunday, June 21, 2020

தந்தையர் தினம் 2


அறிவை தந்து நின்று
ஆசானைக் காட்டி நின்று
இறை வழி காட்டி நின்று
ஈகை தனை சொல்லி நின்று
உழைப்பில் உயர்வு காட்டி
ஊக்கத்தை தந்து நின்று
எக்காலமும் துணை நின்று
ஏணியாய் உயர்த்தி நின்று
ஐயம் யாவும் தீர்த்து நின்று
ஒழுக்கத்தைப் பேணி நின்று
ஓயாது ஓடி பாடுபட்டு
ஔவியம் ஏதும் இலாது
இஃதே.வாழ்க்கையைக் காட்டுவார்
தந்தையெனும் தெய்வமே

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

தந்தையர் தினம்






அவனியில் எனக்கோர்
பிறவி தந்தார்
அவருக்கு தந்தையெனும்
பெருமை தந்தேன் (அ)

அம்மை என்னும் முன்
எதிர் தெய்வம்
காட்டிய மற்றோர் முன்
எதிர் தெய்வமன்றோ

அவர் இல்லை எனில்
நான் என்பது ஏது 
அதை எடுத்துரைக்கும்
இக்கவிதை ஏது ? (அ)

தன்னலம் மறந்து என்னைக்
காத்தவள் அன்னையன்றோ
தன்னையே மறந்து என்னைக்
காத்தவர் தந்தையன்றோ

தந்தையின் பெருமை
தான் உணரார்
தந்தையான பின்னே
தான் உணர்வார் (அ)

இருக்கும் பொழுது
அருமை அறியார் பின்
இல்லாத பொழுது
வெறுமை உணர்வார்

அனைத்தும் பிள்ளைக்கு
என தான் வாழ்வார்
அனைத்தும் தந்து நின்ற
ஆசான் ஆவார் (அ)

கல்விக் கண்ணைத் திறந்து 
அறிவுச் செல்வம் தந்து
அன்பும் பண்பும் காட்டி
ஆருயிர் ஒழுக்கம் காட்டி

தன்னம்பிக்கை யாவும் தந்து
ஊக்கம் உற்சாகம் மூட்டி
நற்பண்பாளனாய் ஆக்கிய
தந்தைக்கு வந்தனம் ! (அ)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்




Sunday, June 14, 2020

இரத்த தானம் தினம்









தானத்தில் சிறந்த
தானம் அன்ன
தானமும்  இரத்த
தானமும் அன்றோ (தா)

வாடும் பசியாற்ற
அன்ன தானமும்
வாழும் உயிர் காக்க
இரத்த தானமும்

ஈடு இணையற்ற
தானம் அன்றோ
மாந்தர் பசி தீர்த்து
உயிர் காக்கும் தானமே (தா)

இரத்த தானம் புரிவதால்
உபரி இரும்பு சத்து
நீங்கும் அன்றோ இதய
நோய் தடுக்குமன்றோ

இரத்த தானம் புரிந்திட
புதிய இரத்தம் ஊறுமே
புது இரத்தம் சுரப்பதால்
ஆரோக்கியம் நல்குமே (தா)

இரத்த தானம் கொடுப்போரும்
இரத்த தானம் பெறுவோரும்
நற் பயன் பெறுவாரே
புது வாழ்வு அடைவாரே

புது செல்கள் உருவாகுமே
புற்று நோயைத் தடுக்குமே
இரத்த தானம் புரிவோமே
இனிய உயிர் காப்போமே (தா)

சோமயாஜிலு சந்தர் (@)
சிவ ராம தாஸன்

Friday, June 12, 2020

கடலே ! கடலலையே !






கடலே ! கடலலையே !
ஏனிந்த ஆரவாரம் !

உலகில் மூன்றில் இரு 
பங்கு கொண்டதாலோ
நீண்டு பரந்து விரிந்து
நிறைந்து நின்றதாலோ

கண் கவர் எழில் நீல
வண்ணம் கொண்டதாலோ
வான் எழில் மதி மடந்தை
உனைக் காண்பதாலோ (க)

சினம் வந்தால் சீற்றம்
கொண்டு எழுகின்றாய்
முழு மதி கண்டு உவகை 
கொண்டு பொங்குகிறாய்

மணற் கடற்கரை என்றால் 
கொஞ்சம் விருப்பமோ
ஆவலோடு துள்ளி நீந்தி
தொட்டு செல்கின்றாய் (க)

அதிகாலையிலும் அந்தி
வேளைப் பொழுதினிலும்
செங்கதிர் செல்வன் எழில்
ஆதவன் தொட்டு செல்கிறான்

மாந்தர் வேண்டிடும் உப்பை
அள்ளித் தருகின்றாய்
மாந்தர் சென்றிட தண்ணீர்
சாலையாய் மாறுகின்றாய் (க)

துருவத்தில் பனிக் கடலாய்
உறைந்து  நிற்கின்றாய்
தூய வெண் பாற்கடலில்
ஹரி உறைந்து நின்றான்

கொதிக்கும் கனல் தாங்காது
ஆவி ஆகி நிற்கின்றாய்
கொந்தளிக்கும் போது
சுனாமி ஆகி நின்றாய் (க)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்





Wednesday, June 10, 2020

பொங்கும் பனிப்பாறை




கரு நீல பெருங் 
கடல் அழகு
கரை புரளும் 
அலையும் அழகு

அகண்ட நீல 
வானம் அழகு
அலை யெனும் 
முகிலும் அழகு

பனிப் பாறை 
முகப்பு அழகு
படர்ந்து விரிந்த 
காட்சி அழகு

துள்ளும் மீன் 
ன துள்ளிடும்
பொங்கி எழும் 
துள்ளல் அழகு

தூவானம் தொட்டு
விட முயலும்
துள்ளல் இங்கு 
ற்புத அழகு

பொங்கும் வெள்ளி 
பனிப்பாறைகள்
பனிக் கடலில் 
மூழ்கி நின்று

நுரை அலையுடன் 
இணையும் காட்சி
விழி இரண்டிற்கு 
விருந்தோ விருந்து 

வி புனையும் 
கவிக்கு விருந்து
முகமதில் மலர்வு 
மனமதில் மகிழ்வு 

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

Sunday, June 7, 2020

இயலும் இயலாது








இயலும் என்பதும் 
     இயலாமை என்பதும் உந்தன் 
இதயம் எடுக்கும் இனிய 
      இறுதி முடிவினிலே

இயலும் சிறிய  
     செயலைக் கூட
இயலாது என    
     தள்ளுவதும்
இயலாமையை 
     தள்ளச் செய்து 
இனிதாய் முடிப்பது  
     இதயமே

இயலுமென 
     நினைத்து விட்டால்
இமயம் கூட 
     சிறு கல் தான்
இயலாதென 
     நினைத்து விட்டால்
இமயமாய் தோன்றும்
     சிறு கல் கூட 

தவிர்த்து நின்றால்
     மலைத்து போவதும்
தகர்த்து நின்றால்
     மலைக்கச் செய்வதும்
தளராது நிற்கும் 
     உந்தன் மனதிலே
தயங்காது செய்யும் 
     உந்தன் செயலிலே

தகர்த்து நின்றால் 
     வாகை சூடலாம்
தவிர்த்து நின்றால் 
     வாடிடும் மனம் 
தகர்த்து நின்றால் 
     வாழ்த்துக்கள் குவியும்
தவிர்த்து நின்றால் 
     வருத்தங்கள் மேலிடும்

இமயத்தைக் கூட
     சிறு கல் ஆக்குவதும்
சிறு கல்லை கூட
     இமயம் ஆக்குவதும்
இதயத்தில் 
     முடிவு செய்யும்
இனிய உந்தன் 
     மனதினிலே

இரண்டிற்கும் உள்ளே 
     இடைவெளி
நூலிழை சிறிய 
     இடைவெளிதான்
இதயத்தில்  துளிர்க்கும் 
     திட நம்பிக்கை 
நம்பிக்கை நம்பிக்கை  
     நம்பிக்கையே 

திறமை இருந்தும் 
     தோற்றுப் போவது
சோம்பல் எனும் 
     தடைக் கல்லாலே
நாளை நாளை என 
     தள்ளி போடாது
இன்றே இனிதே 
     முடித்து விட்டால்

வெற்றி வாகை 
     சூடி விடலாம்
வீர நடையில் 
     நடந்து விடலாம்
வாழ்த்துக்கள் மழையில்
     நனைந்து விடலாம்
வான் புகழை 
     எட்டி விடலாம் கண்ணே

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

நல்ல நண்பன்












நண்பன் இப்படி 
இருக்க வேண்டுமென
நாம் நினையாது

நல்ல நண்பனாய் 
நானிலத்தில் நாம் 
இருந்து காட்டலாமே

நிழலாய் விடாது
என்றும் இருப்போமே
நிஜமாய் நிலைக்
கண்ணாடியாய் இருப்போமே

நயம்பட உரைத்து
நிஜக் கண்ணாடி பிம்பமாய்
நாளும் துணையாய்
நிழலாய் பின் தொடர்வோமே

தக்க சமயத்தில்
மெய் எடுத்து உரைக்காத
நண்பன் நண்பனல்ல

தக்க சமயத்தில்
கை கொடுத்து உதவாத
நண்பன் நண்பனல்ல

நல்ல நண்பனுக்கு
இதுவே அழகு அழகு 

அந்த நல்லதொரு 
நண்பனாய் நாமாய் 
இருந்து காட்டிடுவோமே 

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

கடல் வான தேவதை ~ வெண்ணிலவு

  

            






பரந்து விரிந்த 
பெருங்கடலாம்  
நீலவான 
பெருங்கடலில்     

அணையா துருவ 
ஒளி விளக்கில்
நீந்திச் செல்லும் 
விண்மீன்கள் 

சுழலும் சூரியன் 
மேற்கில் மறையக் 
கரையை தேடும் 
முகில் அலைகள் 

பொலிவை தரும் 
வெண்ணிறத்தில் 
வண்ண ஓவிய 
எழில் முகமாய்

சந்தங்கள் நிறைந்த 
இடி ஓசையுடன் 
மழைச்சாரல் மென்
பூவாய் தூவிட 

குளுமைத் தந்திடும் 
கனி முகமாய் 
வானவில் எனும் 
பட்டுடையில் 

பவனி வரும் 
கடல் தேவதையே 
கண்ணுக்கினிய 
வெண்ணிலவே !

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

Saturday, June 6, 2020

பாவையின் பார்வை









இரும்பு நெஞ்சை 
ஈர்த்திடும் காந்த 
விழிப் பார்வையோ !

செங்கோட்டையை 
தகர்த்திடும் கூர்வேல் 
விழிப் பார்வையோ !

வீர வேங்கையைக் 
கவர்ந்திடும் மருண்ட 
மான் விழிப் பார்வையோ !

தவ முனி ரிஷிகளும் 
மயங்கிடும் கயல் 
விழிப் பார்வையோ !

கார் இருளைப் 
பொசுக்கிடும் சுடர் 
விழிப் பார்வையோ !

கூடல் மா மதுரையை 
எரித்திடும் கனல் 
விழிப் பார்வையோ !

இளம் சேயைக் 
கொஞ்சிடும் கருணை 
விழிப் பார்வையோ !

மாந்தர் யாவரையும் 
மயக்கிடும் எழில் ஓர 
விழிப் பார்வையோ !

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

Friday, June 5, 2020

சுற்றுப்புற சூழ்நிலை தினம்











உண்ணும் உணவும்
பருகும் நீரும்
உயிர் மூச்சுக் காற்றும்
இயற்கை துணையாலே

இயற்கை துணையின்றி
உயிர் வாழ இயலுமோ
இயற்கை கறை படியுமின்
வாழ  வேறு வழியேது

நிலமெனும் மடந்தையைக்
காத்து நின்றிட
செழுமைப் பயிர்கள்
விளைந்து கொடுக்கும்

நீரெனும் மங்கையைக்
காத்து நின்றிட
தூயமிகு நீரிங்கு
உலகினில் நல்கும்

காற்றெனும் தூதனை
சுத்தமாய் வைப்போம்
மாசில்லா தூசில்லா
சுற்றுப்புறம் நல்கும்

ஓஸோன் வளையத்தை
காத்து நிற்போம்
சுற்றுப்புற சூழ்நிலையை
தூய்மையாய் வைப்போம்

மாசும் தூசும் 
நிறைந்திருந்தால்
வையத்தில் வாழ்வது 
எங்கனம் எங்கனம்

மதியும் புவியும் 
அதி சூடானால்
வையத்தில் வாழ்வது 
எங்கனம் எங்கனம்

மரம் செடி கொடி
பல வளர்ப்போம்
காடு வளர்த்து
வான் மழை காண்போம்

இனியன நல்கிடும்
இயற்கையைக் காப்போம்
இன்பமாய் வாழ்ந்து
இயற்கையை ரசிப்போம்

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்




Thursday, June 4, 2020

அன்னாசி வெடி ஆனை பலி











பழத்தைக் 
கொண்டு
பலம் காட்டிய 
பலவீனனே

மத கஜ 
யானையைக்
கொல்ல மனம் 
வந்ததே

அன்னாசியில் 
வெடி வைத்து
அன்னம் 
தந்தது ஏனோ

அறியாத 
கர்ப்பிணி ஆனை
அழகு குட்டியுடன் 
மாண்டதே

உன் பிள்ளைக்கு 
வெடி வைத்து 
ஊன் நீ
தருவாயோ

ஊனமாக்கி 
உடலை பொசுக்கி
உள்ளம் உவந்து 
மகிழ்வாயோ 

மனித நேயம் 
எங்கே எங்கே
ஈவு இரக்க குணம் 
எங்கே எங்கே

வாயில் ரத்த 
கசிவுடனே
வயிற்றில் குட்டியுடன் 
பலியிங்கே

நானிலத்தில் 
மானுடர் நீ
விலங்கு குணம் 
கொண்டால்

மானுடன் வேடம் 
ஏனடா நிஜமாய்
விலங்காய் மாறி 
காட்டுக்கு ஓடுடா

அன்னத்தில் விஷம் 
வைப்போரும்
அன்னாசியில் வெடி 
வைப்போரும்

அகிலத்தில் வாழ்ந்து 
என்ன பயனடா
அறவே ஒழிந்து 
போய் விடுடா

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்


Tuesday, June 2, 2020

மிதி வண்டி தினம் 02 06 2020



இரண்டு சக்கர வாகன
எழில் வண்டி நான்
இலகுவாய் ஓடும்
எழில் வண்டி நான் 

இயந்திரமான அவசர 
மிகு உலகினிலே
இனிமை மிகு அழகு
வண்டி நான் (இ)

என்னில் ஏறி மிதித்தாலும்
கவலை கொள்ளேன் நான்
எளிமை வலிமை பொறுமை
மிகுந்த வண்டி நான்

உடலுக்கு உறுதி தரும்
உடற் பயிற்சி சாதனம் நான்
இதயத் துடிப்பை சீராக்கும்
இனிய மருத்துவ சாதனம் நான்

மாந்தர்க்கு வியர்வை தந்து
கொழுப்பை நீக்க உதவிடுவேன்
மனச் சோர்வை நீக்கி நின்று
மன அழுத்ததிற்கு தீர்வாவேன்

மனதிற்கு உற்சாகம் தருவேன்
மனதில் புத்துணர்ச்சி தருவேன்
மாந்தர்க்கு உதவிடும் எந்தன்
பெயர் தான் மிதி வண்டியே 

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்







Monday, June 1, 2020

உலக பெற்றோர் தினம்


கருவினில் தாங்கி நின்று
கடும் வலி தாங்கி நின்று
கருத்தாய் காத்து நின்று
காசினியில் உயிர் தந்த

தன் உதிரத்தை பாலாக்கி
தீஞ்சுவையாய் ஈந்து நின்று
தாலாட்டு பல பாடி நின்று
தியாகம் பல புரிந்து நின்று

தாயன்பு பாசமும் காட்டியே 
தன்னுயிராய் காத்து நிற்கும்
தாயவள் இல்லையெனில்
தனயன் தான் நான் ஏது ?

உதித்தற்கு காரணமாகி
உயரிய உருவும் தந்து
உயிரும் தந்து நின்று
உயிராய் காத்து நின்று

கண்ணும் கருத்துமாய்
காலம் முழுதும் காத்து
கல்விக் கண் தந்து நின்று
கடமை செவ்வனே புரிந்து

அறிவும் பண்பும் கொடுத்து
ஆளாக்கி தந்து நின்ற
அப்பா ஒருவரில்லை யெனில்
அருமைந்தன் நான் ஏது !

ஏழேழு பிறவி எடுத்தினும்
எத்துணை தொண்டு புரிந்தினும்
தீராக் கடன் தீர்க்க இயலுமோ உயர் தாய் தந்தை பெற்றோரிடம் !

பெற்றோர் தின வாழ்த்துக்கள் !


சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்



Sunday, May 31, 2020

புகையிலை எதிர்ப்பு தினம்

 


31 மே

பகை என தெரிந்தும்
    புகை எதற்கு நண்பா 
உடல் நலம் கெடுக்கும்
    நஞ்செனத் திகழும் (ப)

நுரை யீரல் நலிந்திடும்
    இதயத்தை இறுக்கிடும்
இரத்த அழுத்தம் மிகுந்திடும்
    உபாதைகள் தந்திடும் (ப)

புற்று நோய் தந்திடும் 
    காச நோய் தந்திடும்
ஆஸ்துமா தந்திடும்
    மாரடைப்பில் முடிந்திடும் (ப)

மூச்சு இரைப்பு மிகுந்திடும்
    மலட்டு தன்மை தந்திடும்
ஆரோக்கியம் கெடுத்திடும்
    ஆனந்தம் குலைத்திடும் (ப)

உன்னதமான அரியதொரு
    உயிரையே குலைத்திடும்
புகைப் பழக்கம் கை விடுவாய்
    புகையின்றி வாழ்ந்திடுவாய் (ப)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

Friday, May 29, 2020

வண்ணக் கோலம்



வண்ணக் கோலமிது
வண்ணக் கோலமிது
வளைக்கர எழில் வஞ்சி
வரைந்த கோலமிது (வ)

நெளிவும் சுளிவும் 
கொண்ட கோலமிது
நெஞ்சில் நிறைவு
தரும் கோலமிது

கண்ணை ஈர்க்கும்
வண்ணக் கோலமிது
மனதைக் கவரும்
வண்ணக் கோலமிது (வ)

வாழ்த்து மொழியும்
வண்ணக் கோலமிது
விழிக்கு விருந்து தரும்
வண்ணக் கோலமிது

அக்கையார் இலக்குமி
வரைந்த கோலமிது
அருமை அருமை
அற்புத கோலமிது (வ)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்


தம்பதியர் தினம் 29 05 2020




பதி யின் பொருள் 
பலவென அறிவோம்
கணவன் தலைவன்

அரசன் கடவுள்
வீடு கோவில் குரு 
பூமி உறைவிடம் என (ப)

கணவன் தலைவன்
அரசன் கடவுளென
மனைவி என்றும் 

ன் துணைவணை
தன் பதியாய் 
கொண்டு உவந்தாள் (ப)

வீடு கோவில் குரு 
பூமி உறைவிடமென
கணவன் என்றும்

தன் துணைவியை 
தன் பதியாய் 
கொண்டு உவந்தான் (ப)

மனைவி கணவனை
தன் பதியாய் கொண்டு
கணவன் மனைவியை
தன் பதியாய் கொண்டு

இருவரும் தம் துணையை
தம் பாதி தம் பதி 
என தம்மை பகிர்ந்து
தம்பதியாய் வாழ்வரே (ப)

அயன் சிரசைத் தந்தான்
அரி மார்பைத் தந்தான்
அரன் பாதியைத் தந்தான்
நாம் நம்மைத் தந்தோம்

ஆண்டு மாறலாம் அகவை
கூடலாம் அன்பு மாறுமோ 
தம்பதியர் தினத்தில்
வாழ்த்துக்கள் பரிமாறுவோம் (ப)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்


Thursday, May 28, 2020

வெட்டுக்கிளியின் வெறியாட்டம்




புலம் பெயரும்
பூச்சி இனம்
பாலைவனத்து
பூச்சி இனம் (பு)

கூட்டம் கூட்டமாய்
கூடி பறந்து
கோடி கோடியாய்
தாக்கி நின்று

ஏக்கர் ஏக்கராய்
பரவி நிற்கும்
விளையும் பயிரை 
வேட்டையாடும் (பு)

மழைக் காலத்தே
இனப் பெருக்கம்
கோடைக் காலத்தே
கொடூர தாக்கம்

மூன்று முதல் ஐந்து
திங்கள் வாழும்
மூன்று சுழற்சி கட்ட
வாழும் பூச்சியிது (பு)

நாள் ஒன்றுக்கு
மணிக்கு இருபதாய்
நூறு கிலோமீட்டர்
பறக்கும் திறனுடைய

பசி பட்டினியை
பஞ்சம் உருவாக்கும்
அசுர வேகத்தில்
அழிக்கும் பூச்சியிது (பு)

விளை நிலத்தில்
பயிர் இல்லையேல்
வீதியில் வீடுகளில்
உலா வரும் 

மரம் செடி கொடியினை
அரித்து உண்ணும்
வெறியாட்ட வெட்டுக்கிளி 
அபாயமிகு வெட்டுக்கிளி (பு)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்



Monday, May 25, 2020

வலைத்தளம் 2



வலைத்தளத்தில் வீழ்ந்து விட்டால்
விலகி வருவது மிக கடினமே
வளரும் வயதில் தவிர்க்கா விட்டால்
வாழ்வில் சீர் குலைந்திடுமே

சின் ஷான் சித்திரக் காட்சியால்
சிந்தனை யாவும் மழுங்குமே
செயலி விளையாட்டு மோகத்தால்
செயலில் வேகம் மட்டுமாகுமே

போக்கி மான் விளையாட்டினால்
போக்கே மாறி விடுமே
போக்கிரித் தனம் மிஞ்சி நின்று
போகும் பாதை விலகிடுமே

காணொளியே கதியென இருப்பின்
கண்ணொளி பார்வை மங்குமே
காணும் காட்சி காண படித்திட
கண்ணாடி போட வேண்டிடுமே

கணிணி மடியினி செயலிலி என
காலம் பாராது மூழ்கியிருந்தால்
கண் விழிப் புற்று நோயினால்
கடும் அவதி பட நேரிடுமே

எடுத்து சொன்னால் செவி மடுக்காது
எதிர்த்து நின்று பேசத் தோன்றும்
எதிரி போல கண்டு நின்று 
எடுத்தெறிந்து இகழத் தோன்றும்

விட்டுக் கொடுத்து போகும் எண்ணம்
விந்தையாய் உனக்கு தோணும்
வீண் பிடிவாதம் கொண்டு நின்று
விலகிப் போக எண்ணம் தோணும்

கற்பூரமாய் பற்றிக் கொண்டு நின்று
கல்வி வித்தை கற்று வந்தினும்
கற்பூர வாசனை தெரியாத ஒன்றின
கழுதையாய் தேயும் அபாயமடா

ஓரடி முன் எடுத்து வைத்தாலே 
ஈரடி பின் இழுக்கும் உலகினில்
ஈரடி பின் வேகம் வந்து நின்றால்
பாரினில் முந்துவது எங்ங னமோ


மாற்றம் தனை உன்னில் வந்தால்
ஏற்றம் உயர்வைக் காணலாம்
ஆற்றல் தனை வெள்ளிப் படுத்தி
போற்றும் வாகை சூடலாம்

மாறிடுவாய் இங்கணமே
போற்றிடுவாய் இறை புகழை
ஆற்றிடுவாய் செயல் திறனை
பெற்றிடுவாய் பேர் புகழினை !

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்






வலைத்தளம் 1





அலையாது அலவளாவிடும்
அலை பேசி தனில்
வலைத்தளம் நுழைந்து
உலா வலம் வந்தேன்

மலையென திரண்ட
தகவல்கள் கொண்டு
மலைக்க வைத்திடும்
சிலையாய் மாற்றிடும்

கலை பல யாவும் கற்றிட
கரம் நீட்டிடும் களமாய்
விலை பொருட்கள் வாங்க 
விற்க உதவும் தளமாய்

இலை மறை செய்திகளை
வெளிக் கொணர்ந்திடும்
நிலை குலை வைக்கும்
தகவல்களும் உலாவிடும்

ஓலைச் சுவடி தொகுப்பினை
ஒய்யாரமாய் தந்திடும்
காலை மாலை செய்தியினை
காலத்தே நல்கிடும்

மேலை நாட்டு வர்த்தக
வேலையும் காட்டிடும்
வலைப்பின்னல் கொண்ட
வலைத்தளம் இதுவே.

நன்மை பல நல்கிடும்
சமூக வலைதளமுண்டு
தீமைகளும் தந்திடும்
சமூக விரோதிகளுமுண்டு

கருத்துக்கள் பரிமாற்றம்
பொருளாதார வளர்ச்சி
குடும்ப பிணைப்பு
நட்பு வட்டாரப் பெருக்கம்

வணிக வர்த்தகத் தேடல்
கல்வி பொழுது போக்கு
புதிய கருத்து பதிவுகள்
நலம் பல நிலவிடும்

முக நூலில் மூழ்கி
முழு நேரம் கழிக்கும்
இரகசியம் களவாடி
வங்கி பணமிழக்கும்

குற்றங்கள் பெருகிடும்
வதந்திகள் பரவிடும்
ஆபாசம் நிலவிடும்
தீமைகள் நிலவிடும்

நேரம் கிடைக்கையில்
இணையம் தனில்
உலா வலம் வந்தின்
நன்றே ! இன்றி

இணையத்தில் மூழ்கி
நேரத்தைக் கடத்தினால்
கேடே கேடே கேடே
பெரும் தீதே தீதே தீதே  !

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

பேசும் மரம்

 

 














சிறு விதையென
தூர எறிந்திடினும்
புவியில் ஆழ ஆழ
புதைந்து போயிடினும்

விதையில் உதித்து
வேரூன்றி வளர்ந்து
செடியாகி கொடியாகி
நெடு மரமாகி நின்றேன்

பச்சை இலை துளிர்த்து
வெள்ளைப் பூ பூத்து
காயாகிக் கனிந்து நான் சுவைக் கனி தந்தேன்

அடர்ந்து மலர்ந்து நின்று
படர்ந்து விரிந்து நின்றேன்
கண்ணுக்கினிய விருந்து 
படைத்து குளுமை தந்தேன்

சுடரொளி கதிர் வீசும்
ஞாயிறு கதிர் தடுத்து
வெம்மை தணித்து நின்று
குளுமை நிழல் தந்தேன்

தென்றல் வீசும் பொழுதே
மெல்ல ஆடி நின்றேன்
மழைச் சாரல் பொழியவே
ஒதுங்க இடம் தந்தேன்

விதை வீழ்ந்து போயிடினும்
விருட்சமாய் வளர்ந்த நான்
விஸ்வரூபமாய் ஓங்கி நான்
வேண்டும் நிழல் தந்தேன்

மடிந்த பின் எந்தன் உடல் 
யாவும் உந்தன் அடுப்பங் கரையில் நெருப்பு தார 
வந்து உதவுவேன் கண்ணா

இன்னா செய்தாரை ஒருத்தல் 
எனும் குறள் மொழிக்கேற்ப
இனியன யாவும் தந்தேன் மரம் 
எனும் நாமம் கொண்டேன்.


சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

தண்ணீர் தினம்





22.03.2019 

நீரின்றி  
   உலகில்லை
பாரில் இன்று 
   நீரில்லை

வேரின்றி 
   மரமில்லை
மரமின்றி 
   மாரி இல்லை (நீ)

மாரி காலத்தே  
   பொழிவதில்லை
ஏரி குளம் ஆறு  
   நிரம்புவதில்லை

கார் மேக மழை 
   பொழியவே
மரம் பல 
   வளர்த்திடுவோம்

தூர் வாரி 
    ஏரி  குளம்
சுத்தம் 
    காத்திடுவோம்

விரயம்  
   தவிர்த்திடுவோம்
சிக்கனமாய் 
   செலவிடுவோம்

சேமிப்பு 
   செய்திடுவோம்
நெகிழி 
   துறந்திடுவோம்

போர்க் கால 
   நடவடிக்கையாய்
துரிதமாய் 
   செயல்படுவோம்

ஊரே ஒன்று 
   திறண்டு
கடமையை 
   ஆற்றிடுவோம்

கருவேலம் 
   இழுத்ததுவே
குளிர்பானமும்
   எடுத்ததுவே

மணல் கொள்ளையில் 
   தொலைந்ததுவே
சுத்தகரிப்பில் 
   இழந்ததுவே

புவி சூடாக்கல் 
   தடுத்திடுவோம்
கரி எரியாக்கல் 
   குறைத்திடுவோம்

வருங்காலம் 
   செழித்திடவே
நீர் வளம் 
   காத்திடுவோம்

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

Sunday, May 24, 2020

சகோதரர் தினம்















உதரத்தில் ஒன்று
இணைந்தோம்
உதிரத்தில் ஒன்று
இணைந்தோம்

உறவென பிணைந்து
நின்றோம்
உதறாது இணைந்து
நின்றோம்

உணவினைப் பகிர்ந்து
உண்டோம்
உரிமையாய் பழகி
நின்றோம்

பாலும் சோறும்
பகிர்ந்து நின்றோம்
பாசமும் அன்பும்
பகிர்ந்து நின்றோம்

குரல் கொடுத்தோம்
தோள் கொடுத்தோம்
துணை நின்றோம்
துயர் துடைத்தோம்

தாய் தந்தை
ஒன்று கொண்டோம்
தரணியில் 
இணைந்து நின்றோம்

சகா வாய் குழாமிட
சகோதரன் என ஆனோம்
சக உதரம் பகிர்ந்திட
சகோதரன் என ஆனோம்

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

Friday, May 22, 2020

நிழலில்லா நாள் (24.09.2019)



நிழலில்லா நாள்
காண வாரீர் நண்பா நீ (நி)

ஈரிரு ஆங்கிலத் திங்கள்
இருபத்தி நான்காம் நாளாம்
நற்பகல் மதிய வேளை தனிலே
நானிலம் கண்டு களிக்க (நி)

கடக ரேகைக்கும்
மகர ரேகைக்கும் இடையே
பகலவன் கடக்கும் பொழுதினில்
காண இயலாத ஒரு (நி)

செங்குத்தாய் சூரியன் 
தலை உச்சி நேர் மேலே 
நம் பாதம் தனில் வீழும்
நிழல் தனை காண இயலா (நி)

வருடம் இரு முறை தோன்றும்
நிழல் பூஜ்ஜிய நிகழ்வினை
கவி சிவ ராம தாசனும்
காண விழையும் எழில் (நி)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

உலக குரல் தினம் 16.04.2019



குரலுக்கு வந்தனம்
   செய்வோம்
தாய் மொழி பேசும் 
    இனியதொரு (கு)

ஈரிரு ஆங்கில   
    மாதமதில்
ஈரெட்டு தினம் 
    தனிலே
உலக குரல் 
    தினமாய்
கொண்டாடும் 
    வேளையில் (கு)

பச்சிளம் 
    எழிலொரு
யாழினும் 
    இனியதொரு
அமுதினும் 
    இனியதொரு 
தேன் சுவை 
    மழலை (கு)

குயிலினும் 
    மிக்கதொரு
இன்னிசை 
    கலந்ததொரு
கானத்தை 
    தந்ததொரு
தெய்வீகக் 
    கானக்குயில் (கு)

சிவ ராம 
    தாஸன் 
சிந்தையை 
    மகிழ்விக்கும்
பாடும் பூரண 
    நிலவாய்
பரவசம் 
    தந்திடும் (கு)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

Thursday, May 21, 2020

ஆடித் தபசு


சைவம் வளர்த்திட 
சிவ சங்கரனாய்
வைணவம் தழைத்திட 
அரி நாரணனாய்
பக்தி மார்க்கம் 
தழைத்து ஓங்கிட
பக்தர்க்கு அருள் 
புரிந்து நின்றனரே

அரியும் அரனும் 
ஒன்றென நாம்
அறியும் வகையில் 
இனிது நன்றே
அன்னை உமையவள் தவமிருந்தாள்
ஆடித் திங்களில் 
அருளித் தந்தாள்

சங்கன் பதுமன் 
ஐயம் தீர்த்திடவே
சங்கரனை வேண்டி 
காட்சித் தந்திடவே
சங்கரி தேவி ஊசி
முனை தவமிருந்தாள்
சங்கர நாராயணனை 
அருளித் தந்தனரே

கலியில் கிடைத்த 
நல்ல வரமென்பர்
காணக் கண்கோடி 
வேண்டும் என்பர்
கோமதி அம்பாள் 
அருளித் தந்து நின்ற
கோலமிகு சங்கர 
நாராயணன் தோற்றமே.

நெல்லலை தலத்தில் 
அருளிய கோலமே
எல்லை இல்லா 
பேரானந்தம் தந்திடுமே
இல்லை எனாது அருள் பொழிந்திடுமே
அல்லற் பிறவியும் 
அறுத்து அருளிடுமே !

பாழும் வினைத் 
தீர்த்து கரையேறிடவே
மாலும் அரனும் 
இணைந்த கோலத்தினை
நாளும் பொழுதும் 
சிந்தையில் நினைந்து
தாளைப் பற்றி பணிந்து போற்றுவோமே

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

விழியின் மொழி



விழியின் மொழிக்கு
ஈடு உண்டோ பேசும்
விழியின் பொருளுக்கு
நிகர் உண்டோ கண்ணே (வி)

கரத்தின் தொடுதலால்
காட்டும் அக்கறை
மொழிந்திடும் சொல்லினும்
பெரிது அன்றோ ஆயினும்

இனிய சொல்லினால்
இதயத்தை தொட்டு நின்று
நயனத்தில் ஈரம் தருமோயின்
சாலச் சிறந்தது அதுவன்றோ 

விழியால் பேசியும் கரத்தால் 
அக்கறையும் இனிய சொல்லில் 
அன்பினால் இதயம் தொட்டு விடு
விழியில் ஈரம் காண்பாயே

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

கோடை மழை







கோடை மழை 
   வாராயோ
கொடையெனப் 
   பொழியாயோ (கோ)

கோடி பரிசு பண
   மழை விழுமின்
கோடியில் ஒருவர்க்கே
   உவகை தரும் !
கோடையில் வான்
   மழை பெய்யுமின்
கோடானு கோடிக்கு
   உவகை தருமே (கோ)

கத்திரி வெயில்
   தனை கத்தரிக்க 
 சுட்டெரிக்கும் வெயில்
   சூடினை தணிக்க
ஆலங் கட்டி  மழை 
   என வருவாயே
ஆ நிறை மாந்தர் ஆட
   மகிழ்வு தருவாயே (கோ)

மேகத்தை   
   கருக்க வா
தாகத்தை 
   தணிக்க வா
சோகத்தை   
   தீர்க்க வா
போகத்தை  
   அள்ளித் தா 

சிலு சிலு   
   காற்றுடன் வா
சல சலவென 
   பொழிந்து போ
கல கலவென 
   மகிழ வா
வண்ண வான   
   வில்லொடு வா வா (கோ)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

இராமனுஜ ஜெயந்தி மாலா



எதி ராஜ ராஜ ராஜ 
      ஸ்ரீ இராமாநுஜா 
எம்மான் ஸ்வாமி ஸ்ரீ
    இராமாநுஜா (எ)

வைணவம் தழைக்க
    வந்த வேதாந்தியே
வையகம் உய்க்க வந்த
    வைஷ்ணவ குருவே 

விசிஷ்டா த்வைத 
    தத்துவம் தந்தவனே
விஷ்ணு புராணம் 
    உலகறியச் செய்தவனே

வேதாந்த சங்கிரகம்
    வேதாந்த சாரம்
வேதாந்த தீபம் தந்த
    வரதப் பிரியரே (எ)

ஸ்ரீ கீதா பாஷ்யம்
    ஸ்ரீ ரங்க காத்யம்
ஸ்ரீ பாஷ்யம் தந்த
    ஸ்ரீ ஸ்ரீ இராமாநுஜா

ஆலய வழிபாடு
    ஆன்மீக நெறிமுறை
அருளிச் செய்ததொரு
    ஆதிசேடன் அவதாரமே

ஆதிரையில் தோன்றிய
    ஆண்டாளின் அண்ணனே
ஆளவந்தாரின் சீடரே
    ஆச்சார்யார் பெருமானே (எ)

திருவேங்கடவன்   திருக்கரத்தில்
    திருவாழி சங்கம் ஏந்தச் செய்தவரே
    திருக்கோஷ்டியூர் தலத்திலே
திருமந்திரம் மொழிந்தருளியவனே

தமிழ் வேத மறையாய்
   திவ்ய பிரபந்தம் தனை
திருக் கோவில் தனிலே
    தினமும் ஓத செய்த

சதுர் மறை போற்றும்
    சிவராம தாஸன் பணியும்
சஹஸ்ர சிர ஸர்ப்பாவதார
    ஸ்ரீ இராமானுஜர்    
    தாள் சரணம். (எ)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

Wednesday, May 20, 2020

ஆடித் திங்கள்


ஆடி மாதம் 
தமிழ் திங்கள்
அழகிய ஒரு 
தமிழ் மாதமே
அற்புதங்கள் 
நிறைந்ததொரு
ஆன்மீகத்துகந்த 
தமிழ் மாதமே !

வடக்கில் இருந்து 
தென்திசை நோக்கி
ஆதவன் அடி 
வைப்பது இம்மாதமே
ஆதிமூலமே என 
கூவிய ஆனைக்கு
கஜேந்திர மோட்சம் 
அருளிய மாதமே.

ஆடிப் பூரத்தில் 
அவனியில் தோன்றி
தீந்தமிழ் மொழியில் 
திருப்பாவை தந்து
மாந்தர் நம்மை 
உய்க்க வந்த 
பாவை ஆண்டாள் 
அவதரித்தது இம்மாதமே!

ஊசி முனையில் 
ஈசனை நினைந்து 
உமையவள் வேண்டி 
தவம் புரிந்திட
சங்கர நாராயணனாய் 
தோன்றி அருளிய 
ஆடித்தபசு நிகழ்வு 
இத்தமிழ் மாதமே

பௌர்ணமி திதியில் 
தோன்றி நின்று
பூரண கல்வி ஞானம் 
தந்தருளும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் அவதரித்த
அழகிய மாதம் 
இத்தமிழ் மாதமே !

வாழ்க வளமுடன் 
மாந்தர் புவியிலே
வையம் தனிலே 
அவதரித்து நின்று
வேதத்தை நான்காய் பிரித்தருளிய வேத 
வியாசர் தோன்றிய 
திவ்ய மிகு மாதமே.

பதினெட்டாம் 
நாளாம் திரு நாளில்
பஞ்சம் தீர்த்திட 
புண்ணியம் தந்திட
பொதிகை காவிரி 
பெருக்கி ஓடிடும்
பதினெட்டாம் 
பெருக்கு இம்மாதமே !

வேத ஸ்வரூபமாய் 
திகழ்ந்து நிற்கும்
விஷ்ணு வாகனனாய் 
பறந்து நிற்கும்
பெரிய திருவடி 
சுவாதியில் தோன்றிய
கருட பஞ்சமி 
இத்தமிழ் மாதத்திலே !

நீத்தார் கடன் யாவும் 
தீர்த்து நின்றிட
முன்னோர் பூரண 
அருள் பெற்றிட
தீர்த்த புண்ணிய 
நதியில் முழுங்கிட
ஆடி அமாவாசை 
புண்ணிய திதியே !

போற்றட்டும் இறைநாமம் பாடட்டும் அவன் புகழ்
பரவட்டும் பக்தி மயம் பொழியட்டும் திருவருள்
பொங்கட்டும் மங்களம் பெருகட்டும் செல்வம்
பைந்தமிழ் மாதம் ஆடித் திங்களிலே !

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்